முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.1500 லஞ்சம் வாங்கிய ஊராட்சி அலுவலக பெண் அதிகாரி கைது

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

ஸ்ரீவில்லி,  ஏப். - 30 - அரசு ஒப்பந்தக்காரரிடம் சத்துணவுக்கூடம் கட்டி முடித்ததற்கு காசோலை தருவதற்கு ரூ.1500 லஞ்சம் வாங்கிய வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய பெண் அதிகாரி போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
வத்திராயிருப்பு, அயன்கரிசல்குளத்தில் வசிப்பவர் பாண்டி(52). இவர் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலக அரசு ஒப்பந்தகாரர் ஆவார். இவர் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 2 கிராமங்களில் சத்துணவுக்கூடம் கட்ட அனுமதி பெற்றுள்ளார். அவற்றை கட்டி முடித்துவிட்டு வாங்கிய ரூபாய் போக மாதமுள்ள ரூபாய் 1லட்சத்து 44ஆயிரத்துக்கு காசோலை வாங்க அலுவலக வட்டார வளர்ச்சி அதிகாரி ரேணுகா(50) என்பரை அணுகியபோது அவர் பாண்டியிடம் ரூ1500 லஞ்சம் கேட்டு நிர்பந்தப்படுத்தியுள்ளார். பாண்டி இதுகுறித்து விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயணம் தடவிய ரூ1500 ஐ ரேணுகாவிடம் தரும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ஷியாமளாதேவி, இன்ஸ்பெக்டர்கள் சாமிநாதன், கணேஷ்தாஸ் ஆகியோர் லஞ்சம் வாங்கிய ரேணுகா தேவியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். விசாரணை செய்த நீதிபதி சரவணன் குற்றம்சாட்டப்பட்ட ரேணுகாவை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்