முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரண்டாண்டில் எண்ணிலடங்கா சாதனைகள்: சரத்குமார்

வெள்ளிக்கிழமை, 17 மே 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, மே.18 -​ மூன்றாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று எண்ணிடலங்கா சாதனைகள் நிகழ்த்தியுள்ள தமிழக முதல்வருக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் தலைவர் ஆர். சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:- 

அமெரிக்காவில் அடிமைகளாய் கிடந்த மக் களை அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்து ஆப்ரகாம் லிங்கன், அடிமைத்தனத்தை வேரொடு ஒழித்து சரித்திரத்தில் இடம்பிடித்தார். அந்த வரலாற்று நிகழ்வோடு காவரி நடுவர் மன்றம் ஏற்படுத்தப்பட்டு 22 ஆண்டுகளுக்குப் பிறகே தமிழக முதல்வரின் தொடர் முயற்சியால், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு மத்திய அரசு மறுக்கப்பட்டு வந்த நீதி, இறுதியாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின் வாயிலாக கிடைத்துள்ளது. தமிழகத்தின் உரிமைகளை பாதுகாத்திட முதலமைச்சர் நடத்திய சட்டப்போராட்டத்திற்கு நீதி தேவதை அளித்த மகத்தான வெற்றி, வருங்கால சந்ததியினர்கள் நினைவில் கொள்ளும் வண்ணம் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.

இந்த இரண்டாண்டு கால ஆட்சியில் பசிப்பிணி போக்கும் மருத்துவராய்  தமிழக முதல்வர், அரிசி பெற தகுதியுடைய குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கம் விலையில்லா அரிசி வழங்கி வருகிறார். உணவு  மானியத்திற்காகவே ரூ.4900 கோடி நிதி ஒதுக்கியதை ஏழை, எளிய மக்கள் எந்நாளும் உங்களை மறவாது இருப்பார்கள்.

வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கும் வாழும் மனிதர்க்கெல்லாம் என்று பாடிய பாரதி வாக்குக்கு ஏற்ப, முதலில் சென்னையில் 200 மலிவு விலை உணவகங்கள் திறந்து வைத்து, தொழிலாளர்களின் பசியை போக்கி வருகிறார். இந்த திட்டம் மற்ற 9 மாநகராட்சிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று அறிவித்து இருப்பது பாராட்டுக்குரியது.

இதுமட்டுமா, கட்டமைப்பு வசதிகள், சாலை வசதிகள், பாலங்கள், பேருந்து வசதிகள், ரூ.1026 கோடியில் 6000 புதிய பேருந்துகள் வழங்குதல், பயணிகளுக்கு பயணச் சலுகைகள், மின்னணு பயணச்சீட்டு முன்பதிவு அறிமுகம், விரிவாக்கப்பட்ட முதல்வர் காப்பீட்டுத் திட்டம், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினி, மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை நடப்து ஆண்டில் இரு மடங்காக உயர்வு,  சமுதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணலுகை, ராஜீவ் காந்தி வீட்டு வசதி திட்டத்தின் மூலம் 206 கோடியில் 2775 குடியிருப்புகள், பசுமை வீடுகள், வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் என நாள் தோறும்  ஒரு அறிவிப்புகள் வெளியிட்டு மக்கள் நலன் காத்து வரும் தமிழக முதல்வருக்கு சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்