முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சஞ்சய் தத்துக்கு புகைபிடிக்க அனுமதி இல்லை: கோர்ட்

வெள்ளிக்கிழமை, 17 மே 2013      சினிமா
Image Unavailable

 

மும்பை, மே. 18 - எரவாடா சிறையில் அடைக்கப்படும் சஞ்சய் தத்துக்கு ஒரு மாதத்திற்கு வீட்டு சாப்பாடு, மெல்லிய படுக்கை விரிப்பு, தலையணை மற்றும் மருந்துகள் வழங்குவதற்கு மும்பை கோர்ட் அனுமதி அளித்துள்ளது. 

மும்பை தொடர் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு சிறைதண்டனை விதித்து மும்பை தடா கோர்ட் தீர்ப்பளித்தது. பின் இதனை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தார். இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சஞ்சய் தத்தின் தண்டனையை 5 ஆண்டாக குறைத்தது. எனவே, அவர் மும்பை தடா கோர்ட்டில் சரண் அடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அவர் சில படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டு இருந்ததால், கோர்ட்டில் சரண் அடைய அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

அவகாசத்தை நீடிக்க கோரும் மனுக்களை சுப்ரீம் கோர்டடு தள்ளுபடி செய்ததையடுத்து நடிகர் சஞ்சய்தத் நேற்று முன்தினம் பிற்பகல் மும்பை தடா கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் மும்பை ஆர்தர் ரோடு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். நடைமுறைகளுக்குப் பிறகு புனேயில் உள்ள எரவாடா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். எரவாடா சிறையில் அடைக்கப்படும் அவருக்கு ஒரு மாதத்திற்கு வீட்டு சாப்பாடு, மெல்லிய படுக்கை விரிப்பு, தலையணை மற்றும் மருந்துகள் வழங்குவதற்கு மும்பை கோர்ட் அனுமதி அளித்துள்ளது. அவருக்கு இந்த சலுகை தொடருமா என்பதை சிறை அதிகாரிகளே முடிவு செய்வார்களாம்.

இதேபோல் சிறையில் மின்னணு சிகரெட்டுகளை புகைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் சஞ்சய் தத் மனு செய்திருந்தார். அந்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது. சிறையில் சுதந்திரமாக நடமாடவும், தன் குடும்பத்தினர் தன்னை சந்திக்கவும் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த கோரிக்கை தொடர்பாக கோர்ட் இன்னும் முடிவு செய்யவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்