முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உண்ணாவிரதம் இருக்கும் இலங்கை தமிழர்களை காப்பாற்ற ஐகோர்ட்டில் வழக்கு

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப். - 30 - பூந்தமல்லி சிறப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்து வரும் இலங்கை தமிழர்களின் உயிரை காப்பாஹ்ற கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை வக்கீல் புகழேந்தி ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
பூந்தமல்லி இலங்கை அகதிகள் முகாமில் இருக்கும் கங்காதரன், அமலன், சந்திரகுமார், ஜெயமோகன் ஆகியோர் தங்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வற்புறுத்தி கடந்த 19-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
அவர்கள் உடல்நிலை மோசமாக உள்ளது. எனவே அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று அரசுக்கு மனு கொடுத்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும். எனவே அவர்கள் உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் நாகப்பன். சிவக்குமார் முன்னிலை விசாரணைக்கு வந்தது. அவர்கள் இதுத்தொடர்பாக ஜூன் 6-ந்தேதி தமிழகஅரசு பதில் அளிக்க வேண்டும் என நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்