முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இசை பல்கலைக் கழகம்: முதல்வருக்கு சிவசிதம்பரம் பாராட்டு

சனிக்கிழமை, 18 மே 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, மே.19.  - இசை மற்றும் கவின் பல்கலைக்கழகங்களுக்கு தமிழகத்தில் முதல் பல்கலைக்கழகம் தொடங்க உத்தரவிட்ட  முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரபல பாடகர் சிவசிதம்பரம் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இசையும், ஏனைய கலைகளும் மரபு முறை வழுவாமல் தழைத்து ஓங்க முறையான பயிற்சி முறைகளை பண்படுத்தும்  வகையில் இசை மற்றும் கவின் பல்கலைக்கழகங்களுக்கான தனிப் பல்கலைக்கழகம் முறையாக அமைக்க முன்வந்து  ஆணையிட்ட  தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

தமிழ் அன்னையின் புகழ் நிலைக்க வானுயர் சிலையும், இசையும், நுண் கலைகளும், செழிக்க பல்கலைக்கழகமும், தமிழ்நாட்டின்  வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். முந்தைய தஞ்சை உலகத் தமிழ்  மாநாட்டில் தமிழக முதல்வரால் அன்றே தமிழ் இசையின் தாய் எனப்போற்றி காரைக்கால் அம்மையார் அங்கீகரிக்கப்பட்டதும், தமிழ் இசைவாணர்களின் மனங்களிலும், தமிழ் மக்களின் நெஞ்சங்களிலும்,என்னென்றும் நினைவிருக்கும்.          

இசையையும், பரதத்தையும், முறைப்படி பயின்று கற்றுத்தேர்ந்த முதல்வர் ஜெயலலிதா கலைப்பயிற்சி மற்றும் இசை சம்பந்தப்பட்ட 

விக்ஷயங்களில் தனி ஈடுபாட்டுடன் கவனித்து போற்றி பாராட்டி வளர்த்து வருவதை உலகறியும். இசைக்கும் நுண்கலைக்கும், தமிழ்நாட்டு வரலாற்றில் முதல் பல்கலைக்கழகம் கண்டு பெருமைப்படுத்தியமைக்கு உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று சிவசிதம்பரம் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்