முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை ரூ. 16,552 ஐ எட்டியது

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,ஏப்.  -30- தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பவுன் விலை ஒரே நாளில் ரூ. 232 உயர்ந்தது. தங்கம் விற்பனை சந்தையில் நூற்றாண்டுகளில் இதுவே அதிகபட்ச பவுன் விலை என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் திருமண சீசன் தொடங்குகிறது. ஆனால் அதற்கு முன்பாகவே தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் தொடர்ந்து ஏறி வருகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 16,320 ஆக இருந்தது. ஆனால் கடந்த வியாழன்று பவுன் விலை ரூ. 16,552 ஆக உயர்ந்தது. இதன் மூலம் ஒரே நாளில் பவுன் விலை ரூ. 232 அதிகரித்துள்ளது.
சர்வதேச தங்க மார்க்கெட்டிலும் முதல் முறையாக தங்கத்தின் விலை ஓர் அவுன்ஸ் 1533 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு தங்க நகை விற்பனையாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் உம்மிடி உதயகுமார் கூறும் போது, சர்வதேச உளவில் யூரோவின் மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இது தவிர லிபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் உள்நாட்டு பிரச்சினைகள் காரணமாக பதட்டம் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் கச்சா எண்ணெய் விலையை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவின் தங்க நுகர்வு 930 டன்னாக உயர்ந்துள்ளது. இது இந்த ஆண்டில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 ஆண்டுகளில் பவுன் விலை 130 சதவீதம் அதிகரித்துள்ளது. இநத காரணங்களாலும் தமிழகத்திலும் பவுன் விலை உயர்ந்துள்ளது. இதே போல பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய நகைகளை விற்று புதிய நகைகளாக மாற்றிக் கொள்வதும் அதிகரித்துள்ளது. தங்கத்தின் மறுசுழற்சி பயன்பாடு அதிகரித்தாலும் புதிய நகைகளை வாங்குவதிலும் தொடர்ந்து மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்றார் உதயகுமார்.
வெள்ளி விலையும் கிலோ ரூ. 71,445 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக கடந்த புதனன்று வெள்ளி கிலோவுக்கு ரூ. 68,360 ஆக இருந்தது. இதன் மூலம் ஒரே நாளில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 3,085 ஆக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago