முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் யாத்திரை ஜூன் 15ல் துவங்கும் விஸ்வஇந்துபரிஷத் அறிவிப்பு

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2011      ஆன்மிகம்
Image Unavailable

ஜம்மு, ஏப். - 30 - இரண்டு மாத காலம் நீடிக்கும் அமர்நாத் யாத்திரை திட்டமிட்டபடி ஜூன் 15 ம் தேதி துவங்கும் என்று விஸ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில கவர்னர் என்.என்.ஓரா அறிவித்தபடி ஜூன் 29 ல் துவங்குவதற்கு பதிலாக ஜூன் 15 ம் தேதியே யாத்திரையை துவக்கப்போவதாக விஷ்வ இந்துபரிஷத் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்த அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் பிரவீன்தொகாடியா நேற்று ஜம்முவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பாரம்பரிய வழக்கப்படி ஜூன் 15 ம் தேதி முதல் இரண்டு மாத அமர்நாத் யாத்திரைய துவக்கப்போகிறோம். கவர்னரின் அறிவிப்புக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம். ஜூன் 29 ம் தேதி யாத்திரை துவங்கும் என்று அவர் கூறுகிறார். இதைச் சொல்ல அவர் யார்? இந்துக்கள் முடிவுப்படிதான் யாத்திரை தேதி முடிவு செய்யப்படும். இவ்வாறு பிரவீன் தொகாடியா தெரிவித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்