முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 5 பேர் பலி

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

இஸ்லாமாபாத், ஏப். - 30 -பாகிஸ்தானில் கடற்படை தளம் அருகே வைக்கப்பட்ட சக்திவாயந்த குண்டு வெடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.
கடந்த 15 நாட்களில் நடக்கும் 2 வது தாக்குதல் சம்பவம் இதுவாகும். கராச்சியின் தென்பகுதியில் உள்ள துறைமுக நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கடற்படை தளத்தில் நோட்டோ கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆப்கானில் உள்ள பன்னாட்டு படை வீரர்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு வந்த கப்பல்கள் இங்கு நிறுத்தப்பட்டிருக்கின்றன. வியாழன்று காலையில் 8.15 மணிக்கு நிகழ்ந்த இந்த சம்பவத்தில் 4 கடற்படை வீரர்களும், மோட்டார் பைக்கில் சென்ற ஒருவரும் உயிரிழந்தனர். மெக்ரான் கடற்படை தளத்திற்கு கடற்படை வீரர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்த போது இந்த குண்டு வெடித்ததாக செய்தியாளர் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது. கடந்த செவ்வாய்க் கிழமைதான் 2 கடற்படை பஸ்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டு 4 பேர் பலியானார்கள். 36 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் கடற்படை தளத்தை குறியாக வைத்து நடத்தப்பட்டதாக தெரிகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்