மும்பை ஆடம்பர ஹோட்டலில் கைது செய்யப்பட்ட ஸ்ரீசாந்த்

திங்கட்கிழமை, 20 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, மே.21 - மும்பையில் உள்ள ஒரு பிரபலமான ஆடம்பரமான  ஹோட்டலிலிருந்து, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துவை கைது செய்வதற்கு முன்னதாக அங்குள்ள அறையிலிருந்து மடிக்கணினி மற்றும் சில பொருள்களை போலீஸார் கைப்பற்றினர். இம்மாதம் 15-ம் தேதி சிலருக்கு விருந்து வைக்க ஸ்ரீசாந்து நினைத்திருந்தாராம். அதற்குள் அவர் கைது செய்யப்பட்டுவிட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர். இதுபற்றி போலீஸார் கூறியதாவது:

ஸ்ரீசாந்து நன்றாக குடித்திருந்தார். அவருக்கு நெருக்கமானவராக இருந்த ஜிஜூ ஜனார்த்தன் என்ற பெண்ணை நாங்கள் ஏற்கெனவே மும்பை ஹோட்டலில் தங்க வைத்திருந்தோம். எனவே ஸ்ரீசாந்தை  மும்பைக்கு வரவழைத்தது எங்களுக்கு சிரமமாக இருக்கவில்லை.      

ஜிஜூ சொன்னபடி கேட்பவராக ஸ்ரீசாந்து இருந்தார். எனவே அவரைப் பிடிக்க ஜிஜூவை பயன்படுத்தினோம். 

எனவே முதலில் ஸ்ரீசாந்துவை மும்பையில் உள்ல டிரிடன்ட் ஹோட்டலுக்கு வருமாறு ஜிஜூவிடம் கூறினோம்.  அதன்மூலம் அவருக்கு ஒரு பெண்ணை அறிமுகப்படுத்த நினைத்தோம். நாங்கள் கூறியபடி டிரிடன்ட் ஹோட்டலுக்கு வருமாறு ஸ்ரீசாந்தை, அந்த பெண் ஜிஜூ அழைத்தார். அப்போது ஸ்ரீசாந்து பதில் கூறும்போது, நான் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறேன் என்றார்.

ஆனால் அவர் இன்டர் கான்டினென்டல் ஹோட்டலில் ஒரு பெண்ணுடன் தங்கி இருந்தது தெரிய வந்தது. உடனே போலீஸார் அவர் தங்கி இருந்த ஹோட்டலுக்குச் சென்றனர். அப்போது போலீஸாரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸ்ரீசாந்து, அந்த பெண்ணை தொடக்கூடாது.  அவளை நீங்கள் தொட்டால் நிலைமை விபரீதமாகிவிடும் என்றார். அதுமட்டுமல்லாமல் ஒரு அதிகாரியை தடுத்தார்.எனக்கு முதல் அமைச்சரை தெரியும் என்று கூறிய அவர் எந்த முதலமைச்சர் என்று தெளிவாகக் கூறவில்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இதற்கிடையே ராஞ்சியில் விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் உள்பட 3 பெண்களை போலீஸார் கைது செய்தனர். மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் சுனில் பாடியா, கிரன்டோல், மனீஷ் குடேவா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: