முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நதிநீர் - வர்த்தக பற்றாக்குறை பிரச்சினை: சீன பிரதமர் உறுதி

செவ்வாய்க்கிழமை, 21 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மே.22 - நீதிநீர் விவகாரம் மற்றும் வர்த்தக பற்றாக்குறை விவகாரத்தில் இந்தியாவின் கவலையை போக்கப்படும் என்று சீன பிரதமர் லீ கெகியாங் உறுதி அளித்துள்ளார். இந்தியாவுக்கு 3 நாள் அரசு பயணமாக வந்த சீன நாட்டு பிரதமர் லீ கெகியாங், இந்திய பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி மற்றும் பல தலைவர்களை சந்தித்து பேசினார். பின்னர் பிரதமர் மன்மோகன் சிங், சீன பிரதமர் லீ ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இருநாடுகளிடையே உள்ள எல்லைப்பிரச்சினைக்கு தீர்வுகாண உறுதி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் தேசிய ஆலோசனை குழு தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து பேசினார். 

டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு கூட்டத்தில் லீ கெகியாங் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் எல்லைப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இருநாடுகளுக்கும் போதுமான அனுபவம் மற்றும் அறிவுத்திறன் உள்ளது என்றார். நதிநீர் பிரச்சினை, வர்த்தக பற்றாக்குறை தொடர்பாக இந்தியாவுக்குள்ள கவலையை தீர்க்கப்படும் என்று லீ கூறினார். உலக அளவில் இந்தியாவும் சீனாவும் ஒத்துழைத்து செயல்பட முடியும். தூரத்து உறவுக்காரரை விட பக்கத்து வீட்டுக்காரரின் உறவு மேல். அதுபோல் இந்தியாவும் சீனாவும் நெருக்கமான உறவு வைத்துக்கொள்வது சிறந்ததாகும் என்றார். இருநாடுகளிடையே கருத்து வேறுபாடு நிலவினால் இருநாடுகளுக்கும் நன்மை பயக்கக்கூடிய பல விவகாரங்கள் உள்ளன. அவைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். இருநாடுகளிடையே எல்லைப்பிரச்சினைக்கு சுமூகமாகவும் இருதரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கு அனுபவம் நமக்கு உள்ளது. கடந்த 2 நாட்களாக பிரதமர் மன்மோகன் சிங் உள்பட இந்திய தலைவர்களை நான் சந்தித்து பேசியது பலனுள்ளதாக இருந்தது. இந்த பேச்சுவார்த்தையின்போது இருநாடுகளிடையே உள்ள அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இரண்டு நாடுகளும் இயற்கையாகவே கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த கூட்டு  நாடுகளாகும். இரண்டு நாடுகளும் தங்களுடைய முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை ஆய்வு செய்ய வேண்டும். நம் இரண்டு நாடுகளும் பல ஆக்குப்பூர்வமான விளைவுகளை கண்டுள்ளது. இந்தியாவும் சீனாவும் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டால் அதை உலகமே கவனிக்கும் என்று லீ கெகியாங் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்