பிடிபட்ட சூதாட்ட தரகர்களிடம் ரூ.17 லட்சம் பறிமுதல்

புதன்கிழமை, 22 மே 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.23 - சென்னையில் கைது செய்யப்பட்ட ஐ.பி.எல். சூதாட்ட தரகர்களின் வீடுகளிலிருந்து  இதுவரை ரூ.17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. காவல்துறை அதிகாரி  தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.சி.ஐ.டி. காவல்துறை டி.எஸ்.பி. வெங்கட்ராமன், சென்னையில் கைது செய்யப்பட்ட தரகர்களின் வீடுகளில் சோதனை நடத்தியதில் ரூ.17 லட்சம் பணமும், ஏராளமான சிம் கார்டுகளும், செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 7 தரகர்களில் 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட முக்கியத் தரகர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லா வண்ணம் தடுக்க விமான நிலையங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: