முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து விபரங்களையும் பின்னர் வெளியிடுவேன் - ராசா பரபரப்பு பேட்டி

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2011      ஊழல்

புதுடெல்லி,மே.- 1 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக அனைத்து விபரங்களையும் பின்னர் வெளியிடப்போவதாக முன்னாள் அமைச்சர் ராசா தெரிவித்துள்ளார். இதுவரை இந்தவிஷயத்தில் பகிரங்கமாக வாய் திறக்காத இவர் தற்போது தனது மெளனத்தை கலைத்து விபரங்களை வெளியிடப்போவதாக கூறியிருப்பதால் தி.மு.க. மேலிடம் கலக்கம் அடைந்துள்ளது.நாட்டையே உலுக்கிய இமாலய ஊழலாக கருதப்படுவது ஸ்பெக்ட்ரம் ஊழலாகும். காரணம் இந்த முறைகேட்டால் இந்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்பு கொஞ்சம் நஞ்சமல்ல ரூ.1 76 லட்சம் கோடி. சமீபத்தில் பத்திரிகைகளில் கசிந்த பி.ஏ.சி. அறிக்கை மூலம் இந்த ஊழலால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 1.90 லட்சம் கோடி என்று தெரியவந்துள்ளது. இந்த இழப்பு பற்றி முதலில் மறுத்து வந்த ராசா, தணிக்கைத்துறை அதிகாரி வினோத் ராய் அறிக்கை வெளியிட்ட பிறகு ஒரு வழியாக அதை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது.
எதிர்க்கட்சிகளின் கடுமையான வற்புறுத்தலை அடுத்த ஆ.ராசா கைது செய்யப்பட்டு அவரிடம் 14 நாட்கள் விசாரணை நடந்தது. பின்னர் அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவருக்கு அடிக்கடி காவல் நீடிப்பு செய்யப்பட்டு வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சித்தார்த்த பெஹூரா, ஆர்.கே.சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் அதிபர் பால்வா ஆகியோரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். பிறகு 5 தனியார் நிறுவன அதிகாரிகளும் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்கள். இதைத்தொடர்ந்து இந்த நிறுவனங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இதனிடையே ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதி குடும்பத்திற்கும் தொடர்பு இருப்பது அம்பலமானது. அதாவது கலைஞர் டி.வி.க்கு சினியுக் நிறுவனம் மூலம் ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் அம்பலமானது. ஆனால் இந்த தொகையை திருப்பிக்கொடுத்துவிட்டதாக கலைஞர் நிர்வாகம் கூறியது. இந்த டி.வி.யில்தான் தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகளும், கருணாநிதி மகள் கனிமொழிக்கு 20 சதவீத பங்குகளும் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கு 20 சதவீத பங்குகளும் உள்ளன. கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் வெளியானதை அடுத்து தயாளு அம்மாளிடமும் கனிமொழியிடமும் சி.பி.ஐ. அதிரடி விசாரணை நடத்தியது.
இந்தநிலையில் சில தினங்களுக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த குற்றப்பத்திரிகையில் கனிமொழி பெயர் சேர்க்கப்பட்டுள்ளார். கனிமொழி ஒரு கூட்டுச்சதியாளர் என்று சி.பி.ஐ. அதில் குற்றம்சாட்டியுள்ளது. கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இப்படியாக ஒவ்வொரு விஷயமாக அம்பலமாகி வரும் நிலையில் சிறையில் இருக்கும் ராசா கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்டார். அப்போது என்டிடிவிக்கு தனது மெளனத்தை கலைத்து சில கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். இதுவரை வாய் திறக்காமல் மெளனம் சாதித்த ராசா தற்போது முதல் முறையாக தனது மெளனத்தை கலைத்துள்ளார். உங்கள் மீதான குற்றப்பத்திரிகை பற்றி என்ன கருத்து சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது அனைத்து விபரங்களையும் பின்னர் வெளியிடுவேன் என்று ஒரே வரியில் பதில் அளித்தார் ராசா. இந்த ஊழல் விவகாரத்தில் தி.மு.க. எப்படி கையாண்டது என்று கேட்டபோது அதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார் ராசா. கனிமொழி மீது குற்றப்பத்திரிகை தாக்கலானதும் ஆத்திரம் அடைந்த தி.மு.க. மேலிடம் அவசரமாக கூடியது. அப்போது தன் மகள் கனிமொழி பற்றி வானலாவ புகழ்ந்து பேசினாராம் கருணாநிதி. ஆனால் ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கலானபோது அவர் எந்த ஒரு கருத்தையும் சொல்லவில்லை. எதையும் காட்டிக்கொள்ளவுமில்லை. இந்த நிலையில்தான் இந்த ஊழல் தொடர்பாக அனைத்து விபரங்களையும் பின்னர் வெளியிடப்போவதாக ராசா கோபத்துடன் கூறியிருப்பது தி.மு.க. மேலிடத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இதுவரை வெளி வராத விபரங்களை வெளியிடுவார் என்று தெரிகிறது. இதனால் தி.மு.க. மேலிடம் ஆடிப்போய் உள்ளது.
சிறைச்சாலையில் இருக்கும் ராசா,அங்கு சட்டப்புத்தகங்களை படித்து பொழுதை போக்குகிறார். இவரைப்பற்றி தி.மு.க. மேலிடம் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. ஆனால் கனிமொழி விஷயத்தில் மட்டும் கோப கனலை கக்குகிறது தி.மு.க. மேலிடம்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago