நடிகை ஷில்பா ஷெட்டிக்கு மதுரை ஐகோர்ட் கிளை நோட்டீசு

புதன்கிழமை, 22 மே 2013      சினிமா
Image Unavailable

 

மதுரை,மே.23 - ஐபிஎல் சூதாட்ட புகார் தொடர்பாக நடிகை ஷில்பாஷெட்டிக்கு மதுரை ஐகோர்ட் கிளை நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க கோரி மதுரை மேலூரை சேர்ந்த வக்கீல் சாந்தகுமரேசன் மதுரை ஐகோர்ட்கிளையில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் இந்திய கிரிக்கெட் வாரியத்தை மத்திய விளையாட்டு துறை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்திய கிரிக்கெட் அணி என்று அழைக்ககூடாது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு தடை விதிக்க வேண்டும். கிரிக்கெட் போட்டிகளை டிவியில் ஒளிபரப்பகூடாது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பல கோடி முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் சுந்தரேஸ், மாலா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. 

    வழக்கை விசாரித்த நீதிபதிகள் விளையாட்டு துறை செயலாளர், கிரிக்கெட் வாரியம், சிபிஐ இயக்குனர், மும்பை, டெல்லி போலீஸ் கமிஷனர்கள், நடிகை ஷில்பா ஷெட்டி, தொலைக்காட்சி நிறுவனம் உள்பட 9 பேருக்கு வருகிற 10ம்தேதிக்குள் விளக்க அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: