முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியாமி மாஸ்டர்ஸ்: ஜோகோவிக் - சோம்தேவ் மோதல்

வியாழக்கிழமை, 23 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

மியாமி, மே. 24 - அமெரிக்காவில் நடைபெற்று வரும் மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி யின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3 - வ து சுற்றில் செர்பிய வீரர் நோவக் ஜோ கோவிக்கும், இந்திய இளம் வீரர் சோ ம்தேவ் வர்மனும் மோத உள்ளனர். இந்த நிகழ்ச்சி ஆங்கில இலக்கியத்தில் புகழ் பெற்ற டேவிட் மற்றும் கோலி யாத் எனும் பழைய கதையை நினைவு கூறும் வகையில் உள்ளது. 

செர்பியாவின் நட்சத்திர வீரரான ஜோ கோவிக் உலக நம்பர் - 1 வீரராவார். இந்தியாவின் முன்னணி வீரர்களில் ஒருவ ரான  வர்மன் தரவரிசையில் பின்தங்கி ய வீரராவார். 

ஏ.டி.பி. சுற்றுப் பயணப் போட்டிகளில் ஒன்றான மியாமி மாஸ்டர்ஸ் டென்னி ஸ் அமெரிக்காவின் கடற்கரை பகுதியி ல் கடந்த சில நாட்களாக வெகு விமர் சையாக நடந்து வருகிறது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் களத்தில் குதித்துள்ளனர்.  இந்தப் போட்டி தற்போது காலிறுதியை நோக்கி முன்னேறி வருகிறது. 

சர்வதேச அளவில் முக்கிய போட்டி யான இதில் பங்கேற்று வரும் வீரர்கள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் 2-வ து சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதி ல் இந்திய வீரர் சோம்தேவ் வர்மனும், பிரான்ஸ் வீரர் வாசலினும் மோதினர். 

இந்த ஆட்டத்தில் தகுதி நிலை பெறாத சோம்தேவ் வர்மன் சிறப்பான ஆட்டத் தை வெளிப்படுத்தி பிரான்ஸ் வீரரை திணற வைத்தார். இறுதியில் வெற்றியு பெற்றார். 

இந்த ஆட்டத்தின் இறுதியில் இந்திய வீரர் வர்மன் 4 -6, 6 - 4, 7 -5, என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் எடோவர்டு ரோஜர் வாசலினை தோற்கடித்து அடுத் த சுற்றுக்கு முன்னேறினார். 

இந்திய வீரர் வர்மன் முதலில் பின் தங் கி இருந்தார். பின்பு சிறப்பாக ஆடி பிரான்ஸ் வீரரை திக்குமுக்காட வைத் தார். இறுதியில் கடைசி 2 செட்டை வென்றார். 

சோம்தேவ் வர்மனுக்கு இந்தப் போட்டியில் அவரது சர்வீஸ் கை கொடுத்தது. சர்வீஸ் மூலம் 70 சதவீதப் புள்ளிகளைப் பெற்றார். தவிர 4 முறை இரட்டை தவ றுகளைப் புரிந்தார். 

வர்மன் முதலில் சற்று தடுமாறினாலும் பின்பு சுதாரித்து ஆடி 2- வது மற்றும் 3 - வது செட்டுகளில் வெற்றி பெற்றார். 7-வது கேமில் கோட்டை விட்டதால் முதல் செட்டை இழந்தார். 

மற்றொரு 2 -வது சுற்று ஒன்றில் செர் பிய வீரர் நோவக் ஜோகோவிக், செக் வீரர் லூகாஸ் ரசோலை 6 -1, 6 -0 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். 

அடுத்து நடக்க இருக்கும் 3-வது சுற்றில் உலக நம்பர் - 1 வீரரான ஜோகோவிக் கும், இந்திய வீரர் சோம்தேவ் வர்மனு ம் மோத உள்ளனர். இதில் வெற்றி பெ றும் வீரர் காலிறுதிக்கு தகுதி பெறு வார். 

ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதி மற்றும் டேனியல் நெஸ் டர் ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெ ற்று 2- வது சுற்றுக்கு முன்னேறியது. 

மகேஷ் பூபதி மற்றும் நெஸ்டர் ஜோடி 7 -6(3), 6 -3, என்ற செட் கணக்கில் பிரான்சைச் சேர்ந்த ரிச்சர்டு காஸ்கட் மற்றும் எடோவர்டு இணையை வென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்