முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசன் அலியிடம் அமுலாக்க பிரிவு விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2011      ஊழல்
Image Unavailable

மும்பை, மே.- 1 - கறுப்புப் பண முதலை ஹசன் அலி கானிடம் அமுலாக்க இயக்குனரகம் 3 நாட்கள் விசாரணை நடத்த மும்பை தனிக்கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
கறுப்புப்பண முதலை ஹசன் அலி கான், புனே நகரை சேர்ந்தவர். குதிரை பண்ணை அதிபரான இவர் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக சம்பாத்தியம் செய்து வெளிநாட்டு வங்கிகளில் டெபாசிட் செய்து வைத்துள்ளார். இது தொடர்பாக ஹசன் அலி மீது வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ. மற்றும் அமுலாக்க இயக்குனரகம் விசாரணை நடத்தி வருகின்றன. ஹசன் அலிக்கு பாஸ்போர்ட்டு கிடைக்க உதவி செய்ததாக புதுவை கவர்னர் இக்பால் சிங்கிடம் அமுலாக்க இயக்குனரக அதிகாரிகள் 3 தடவைகள் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் ஹசன் அலியிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மும்பை தனிக்கோர்ட்டில் அமுலாக்க இயக்குனரகம் அனுமதி கோரியிருந்தது. இதற்கு கோர்ட்டு அனுமதி கொடுத்துள்ளது. ஆனால் 3 நாட்கள் மட்டுமே விசாரணை நடத்த வேண்டும் என்று அமுலாக்க இயக்குனரகத்திற்கு கோர்ட்டு தண்டனை விதித்துள்ளது.
இதற்கிடையில் ஹசன் அலிக்கு ஜாமீன் கொடுக்கும்படி தனி கோர்ட்டுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனையொட்டி தனிகோர்ட்டில் ஜாமீன்கோரி ஹசன் அலி மனுத்தாக்கல் செய்துள்ளார். ஹசன் அலிக்கு பாஸ்போர்ட் கிடைக்க உதவி செய்த விவகாரத்தில் புதுவை லெப்டினெட் கவர்னர் இக்பால் சிங்,காங்கிரஸ் தலைவர் ஆம்லெந்து பாண்டே ஆகியோரிடம் அமுலாக்க இயக்குனரக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் கிடைத்த தகவல் சம்பந்தமாக ஹசன் அலியிடம் விசாரணை நடத்த அமுலாக்க இயக்குனரகத்திற்கு இந்த தனிக்கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்