முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதத்துக்கு எதிராக விமான தாக்குதல் அவசியம்

சனிக்கிழமை, 25 மே 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மே. 26 -- பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் ஆளில்லா விமான தாக்குதல் அவசியம். மேலும் அது சட்டப்பூர்வமானதே என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார். 

அமெரிக்க தேசிய பாதுகாப்பு பல்கலைக் கழகத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு ஒபாமா பேசியதாவது, 

இன்றைய சூழலில் பயங்கரவாதம் என்பது உலகை அச்சுறுத்தும் முக்கிய காரணியாக உள்ளது. அதனால் நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். இதற்கு ஆளில்லா விமான தாக்குதல் மிகவும் அவசியமான ஒன்றாகும். இதை சம்பந்தப்பட்ட நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று மறைமுகமாக பாகிஸ்தானுக்கு பதிலளித்தார் ஒபாமா. மேலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் ஆளில்லா விமான தாக்குதல் என்பது நியாயமான சட்டப்பூர்வமான ஒன்றுதான் என்றார். 

மேலும் ஆளில்லா விமான தாக்குதல்களால் கடந்த 2003 ம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் மட்டும் 3,386 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கருத்தை குறிப்பிட்ட ஒபாமா, பயங்கரவாதிகளை கொல்ல வேண்டும் என்பது நம் நோக்கமல்ல. முதலில் அவர்களை கைது செய்ய வேண்டும். பிறகு விசாரணை நடத்த வேண்டும். அதன் பிறகு அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் நிலைப்பாடு என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்