முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதவி விலக மாட்டேன்: தலைவர் சீனிவாசன் பேட்டி

சனிக்கிழமை, 25 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, மே.26  - ஐ.பி.எல். கிரிக்கெட் ஊழல் விவகாரத்தில் எனது மருமகனை கைது செய்து அரசியல் ரீதியாக என்னை குறிவைக்கிறார்கள். எனவே கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியை விட்டு விலக மாட்டேன் என்று  கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசன் கூறினார்.

ஐ.பி.எல். மேட்ச் பிக்சிங் எனப்படும் சூதாட்ட புகார் தொடர்பாக கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த் உள்பட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த 3 வீரர்கள் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த சூதாட்ட ஊழல் விவகாரம் பாம்பு-ஏணி விளையாட்டாக இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு திரைப்புள்ளிகள், அரசியல் புள்ளிகள் வரை வரிந்து விரிந்து பறந்துள்ளது போலீஸார் விசாரணயில் தெரிய வந்துள்ளது. இதில் முக்கிய புள்ளியான சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்,        

இதுபற்றி  கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசன் டெலிவிஷன் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஐ.பி.எல். சூதாட்ட புகார் தொடர்பாக எனது மருமகன் குருநாத் மெய்யப்பனை போலீஸார் கைது செய்துள்ளனர். அரசியல் ரீதியாக சூழ்ச்சி செய்து எனது மருமகனை கைது செய்து எனக்குக் குறி வைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் பதவி விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகத்திலும்,

சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைப் பொறுப்பிலும், வெறும் கவுரவ உறுப்பினராக மட்டுமே குருநாத் உள்ளார். இந்த நிலையில் எனக்கு குறி வைக்கப்பட்டுள்ளது. எனவே நான் ஒருபோதும் பதவி விலக மாட்டேன் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்