முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை சூப்பர் கிங்ஸை நீக்கினால் விளையாட மாட்டேன்

சனிக்கிழமை, 25 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, மே. 26 -- ஐ.பி.எல். அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன் பெட்டிங் புகாரில் கைது செய்யப்பட்டிருப்பதால் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து அந்த அணி நீக்கப்படக் கூடும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை அணி நீக்கப்பட்டால் தாம் ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கமாட்டேன் என்று அதன் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்களின் கைதுடன் ஆரம்பமானது ஐ.பி.எல். பிக்ஸிங் விவகாரம். இதன் பிறகு புக்கிகள், பாலிவுட் நடிகர் கைது என தொடர்ந்த இந்த விவகாரம் கடைசியாக ஐ.பி.எல். அணிவரையிலும் நீடித்திருக்கிறது. மும்பையில் கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகர் விண்டுவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன் என தகவல்கள் வெளியானது. பின்னர் விண்டுவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் குருநாத் மெய்யப்பன் ஐ.பி.எல். போட்டிகளில் பெட்டிங்கில் ்ஈடுபட்டார் என்றும் அவர் ரூ. ஒரு கோடி பெட் கட்டி இழந்திருக்கிறார் என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து விசாரணைக்காக மும்பை போலீசார் குருநாத் மெய்யப்பனை தேடி சென்னை வந்தனர். ஆனால் அவர் கொடைக்கானலில் இருந்தார். அவரை ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பப்பட்டது. தமக்கு கால அவகாசம் கோரியிருந்தார் குருநாத். இதை மும்பை போலீசார் நிராகரித்ததால் வேறுவழியின்றி நேற்று முன்தினம் உடனடியாக மும்பைக்கு விமானம் மூலம் குருநாத் புறப்பட்டுச் சென்றார். மும்பை விமான நிலையத்தில் இருந்தே அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார் சில மணி நேர விசாரணைக்குப் பிறகு கைதும் செய்தனர். 

இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கவுரவ உறுப்பினர்தான் குருநாத் மெய்யப்பன் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரும் குருநாத்தின் மாமனாருமான சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் அறிவித்தது. அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இணையதளம், குருநாத்தின் ட்விட்டர் பக்கங்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அணியில் அவர் வகித்த பொறுப்புகள் அனைத்தும் நீக்கப்பட்டன.

இந்நிலையில் சென்னை அணியின் உரிமையாளர் குருநாத் பெட்டிங் விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருப்பதால் அந்த அணி ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து நீக்கப்படக் கூடும் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியிடம் கருத்து கேட்ட போது, அப்படி சென்னை அணியை நீக்கினால் தான் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடமாட்டேன். நான் பணத்துக்காக விளையாடவில்லை என்று கூறியுள்ளார் தோனி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்