முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குருநாத் மெய்யப்பன் சஸ்பெண்டு: பி.சி.சி.ஐ. அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, மே. 27 - ஐ.பி.எல். சூதாட்டத்தில் ்ஈடுபட்ட குருநாத் மெய்யப்பன் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ்ஈடுபட அவருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாக உறுப்பினர்களில் ஒருவரான குருநாத் மெய்யப்பன் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நிர்வாக உறுப்பினர் என்ற முறையில் அவர் ஐ.பி.எல். விதிகளுக்கும், ஊழலுக்கு எதிரான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைக்கும் உட்பட்டவராகிறார். இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒழுங்குமுறை குழு மற்றும் ஐ.பி.எல். நடத்தை குழுவின் விசாரணைகள் முடியும் வரை மெய்யப்பன் எந்த விதமான கிரிக்கெட் நடவடிக்கைகள் மற்றும் சென்னை அணியுடன் எந்தவிதமான தொடர்பும் வைத்திருக்க தடை விதிக்கப்படுகிறது. 

கடந்த 23 ம் தேதி மாலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மும்பை போலீஸ் அதிகாரிகளை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் சூதாட்டம் குறித்த விசாரணையில் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குருநாத் மெய்யப்பனின் மாமனார் சீனிவாசன் தான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago