முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.ஏ.சி.வரைவு அறிக்கை கசிவு: விசாரணை நடத்த சுஷ்மா கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2011      இந்தியா
Image Unavailable

மங்களூர்,மே. - 1 - நாட்டிற்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்திய பாராளுமன்ற பொதுக்கணக்குக்குழுவின் வரைவு அறிக்கை கசிந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2ஜி ஸ்பெக்டரம் ஊழல் குறித்து பாரதிய ஜனதா தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பாராளுமன்ற பொதுக்கணக்குக்குழு விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில் வரைவு அறிக்கை தாக்கல் தயார் செய்யப்பட்டு அதை குழுவில் தாக்கல் செய்யப்பட இருந்தது. அதற்குள் வரைவு அறிக்கையில் கூறப்பட்ட விஷயங்கள் வெளியாகிவிட்டது. அந்த வரைவு அறிக்கையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் அலுவலகம், மத்திய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் ஆகியோர் மீது கண்டனமும் குற்றமும் சாட்டப்பட்டிருந்தது. இதற்கு குழுவில் உள்ள காங்கிரஸ், தி.மு.க. உள்பட 11 உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் குழுவின் தலைவர் சைபுதீன் ஜோஸ் என்பவரை ஜோஷிக்கு பதிலாக தேர்ந்தெடுத்து ரகளையிலும் ஈடுபட்டனர். இதற்கு பாரதிய ஜனதா உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. வருகின்ற பாராளுமன்ற கூட்டத்தில் இந்த அறிக்கை குறித்து விவாதிக்காவிட்டால் கூட்டத்திலேயே கலந்துகொள்ள மாட்டோம் என்றும் பாரதிய ஜனதா அறிவித்துள்ளது.
இந்தநிலையில் பாராளுமன்ற லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் நேற்று மங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பொதுக்கணக்குக்குழுவின் வரைவு அறிக்கை கசிந்தது எப்படி? என்று கேள்வி எழுப்பிய அவர் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் இந்த அறிக்கை கசிந்து பத்திரிகையில் வெளியானதற்கு முரளி மனோகர் ஜோஷியே காரணம் என்று கூறப்படும் குற்றச்சாட்டுக்களையும் மறுத்த அவர் இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை. ஆதாரமற்றவை என்றும் கூறினார். எனவே அறிக்கை வெளியானது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிடவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்