முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர். ஆட்சியை அமைக்கும் நாளே உழைக்கும் மக்களின் திருநாளாகும்: முத்துமணி:

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,மே.- 1 - இன்று மே தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. முன்னாள் எம்.பி முத்துமணி வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது,  மே 1 ம் நாள் உலகத் தொழிலாளர்களின் ஒப்பற்ற உரிமை திருநாள். தன்னம்பிக்கை, உழைப்பு என்ற மூலதனங்களை கொண்டு வீரநடை போட்டு வரும் நமது தொழிலாளர் சமுதாயத்திற்கு மே தின வாழ்த்துக்களை சமர்ப்பிப்போம். அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த ஆலை தொழிலாளர்கள் 1883 ம் ஆண்டு ஒன்று கூடி ஆலை நிர்வாகங்களை எதிர்த்து போராடினார்கள். அமெரிக்க அரசும், முதலாளிகளும் சேர்ந்து தொழிலாளர்கள் மீது கடும் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டார்கள். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
ஆனால் இறுதியில் தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி பெற்றது. அவர்களுடைய முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. அதாவது நாள் ஒன்றுக்கு 8 மணி நேர வேலை, அதற்கு தகுந்த ஊதியம், தகுந்த ஓய்வு என்பது முடிவானது. இந்த முடிவு ஏற்பட்ட நாளைத்தான் உலக தொழிலாளர் சங்கத்தின் முடிவுப்படி 1884 ம் ஆண்டு முதல் மே 1 ம் நாளை தொழிலாளர் தினமாக உலக நாடுகள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.
திராவிட வரலாற்றில் ஓர் அங்கமாக திகழ்ந்தவர் தந்தை பெரியார். அவர் தனது மளிகைக் கடையில் மூட்டைகளை தானே சுமந்து இறக்கி வைப்பார். சுமை தூக்குவதை அவமானமாக கருதவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். உழைக்கும் தொழிலாளியின் உன்னதத்தை எடுத்து காட்ட இதற்கு மேல் என்ன உதாரணம் வேண்டும். பொதுவுடமை கொள்கை என்பது முற்போக்கு கொள்கை கொண்ட எல்லா கட்சிகளுக்குமே பொதுவானதுதான்.
நம்மை எல்லாம் ஆளாக்கிய அண்ணாவுக்கு பொதுவுடமை கொள்கை மீது ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. தமிழ்நாட்டிலேயே முதல் முதலாக மே தின நாள் மலர் வெளியிட்டவர் அண்ணா. உழைப்பவரே உயர்ந்தவர் என்ற தத்துவத்தை எடுத்து சொன்னவர் எம்.ஜி.ஆர். தொழிலாளி, விவசாயி, மீனவ நண்பன், படகோட்டி போன்ற திரைப்படங்களில் நடித்து உழைக்கும் மக்களின் உன்னதத்தை எடுத்து காட்டியவர் எம்.ஜி.ஆர். அவருடைய திரைப்பட பாடல்கள் அனைத்திலும் தொழிலாளிகளை முதன்மை படுத்தும் வகையிலேதான் இருக்கும். அனைத்து மக்களின் குழந்தைகளும் சமமாக உணவருந்த கூடிய திட்டமாக சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். தொழிலாளர்களின் உரிமையை காக்க அவர் அண்ணா தொழிற்சங்க பேரவையை உருவாக்கினார்.
எம்.ஜி.ஆரின் வழித்தடத்தில் ஜெயலலிதா ஏழை, எளிய மக்கள் ஏற்றம் பெறும் வகையில் நல்வாழ்வு திட்டங்களை கொண்டு வந்தார். ஜெயலலிதா கொண்டு வந்த உழவர் பாதுகாப்பு திட்டம் காலத்தால் அழிக்க முடியாத திட்டமாகும். இன்றைக்கு நமது நாட்டின் மக்கள் 211  கோடியை எட்டிப் பிடித்துள்ளது. எந்தவொரு வளரும் நாடும் அந்த நாட்டின் மனித வளத்தை பயன்படுத்துவதை பொறுத்தே அந்த நாட்டின் வளர்ச்சி இருக்கும். எனவே மனித சக்தியை நாம் போற்ற வேண்டும். மனித சக்தி என்பது தொழிலாளர்களிடையே இருந்து பெறப்படும் உழைப்பு சக்தியாகும். ஜெயலலிதா தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நலிந்த தொழிலாளர்களை தேர்ந்தெடுத்து மே தினத்தன்று அவர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் குடும்ப நிதியாக வழங்கி தொழிலாளர்களின் உன்னதத்தை போற்றும் தலைவராக இருக்கிறார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்து விட்டது. வரும் மே 13 ம் தேதியை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்களின் எண்ணத்திற்கேற்ப அ.தி.மு.க. கூட்டணி அமோகமாக வெற்றி பெற்று ஜெயலலிதாவின் சீரிய தலைமையில் எம்.ஜி.ஆர். ஆட்சியை மீண்டும் அமைக்கும் நாளே உழைக்கும் மக்களின் உன்னத திருநாளாகும். இவ்வாறு அந்த கட்டுரையில் முத்துமணி தெரிவித்துள்ளார்.   
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago