சென்னை, மே.- 1 - இன்று உலகமெங்கும் உழைப்பாளி மக்களால் மே தினம் மிகச்சிறப்பானது. தமிழகத்திலும், மே தினத்தை தொழிற்சங்கள் அரசியல் கட்சிகள் கொண்டாடுகின்றன. இதையொட்டி தலைவர்கள் மே தின வாழ்த்து கூறியுள்ளனர். அவை வருமாறு:-
முதல்வர் கருணாநிதி:
உழைப்பாளிகளின் பெருமையை உலகெங்கும் உரைத்திடும் உன்னதத் திருநாள்! உழைக்கும் தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் முதலானவற்றைச் சட்டnullர்வமாக உலக அரங்கில் உறுதி செய்த நாள், இந்த மே நாள்! மேதினி போற்றும் இந்நன்னாளில் தொழிலாளர் சமுதாயத் தோழர்களுக்கும், அவர்தம் குடும்பத்தார்க்கும் எனது இதயம் கனிந்த மேதின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர்  விஜயகாந்த்: உழைப்பவருக்கு உயர்வு தேடுகின்ற நாள் மே நாளாகும். ஜாதி, மதம், இனம், மொழி, நிறம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மனித குலம் முழுவதும் கொண்டாடும் நாள் மே தினமாகும்.நாடுகள் பலவாயினும் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுவது மே தினம் மட்டுமே. எவ்வாறு பறவைகள் பறந்து இரை தேடுகின்றனவோ, மீன்கள் nullந்தி இரை தேடுகின்றனவோ, ஊர்வன ஊர்ந்து உணவு தேடுகின்றனவோ அதே போல மனிதர்களும் உழைத்து வாழ வேண்டும் என்பதுதான் இயற்கையின் நியதி. ஆனால் ஒருவரை ஒருவர் ஏமாற்றியும், ஒருவரை இன்னொருவர் சுரண்டியும், ஒருவர் பொருளை இன்னொருவர் திருடியும் வாழ்வதென மனிதர்களுக்கிடையே தீயப் பழக்கங்கள் கால வேகத்தில் உண்டாகி விட்டன. எல்லோரும் உழைத்து வாழ்வதன் மூலமே இத்தகைய தீமைகளுக்கு முடிவு கட்ட முடியும். உழைப்பதற்கு தயாராக இருந்தாலும் வாய்ப்பு கிடைப்பதில்லை.வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றால் ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்து ஒரு சிலர் சுக வாழ்வு நடத்துவதும், மிகப் பலர் வறுமையில் வாடவுமான நிலை ஏற்படுகிறது. சமுதாயத்தின் அமைப்பை மாற்றி எல்லோரும் இன்ப வாழ்வு காண பாடுபடுவதே தே.மு.தி.கவின் இலட்சியமாகும். வறுமையை ஒழித்து எல்லோருக்கும் வாழ்வு கிடைக்க வழி தேடுவதே நமது திட்டமாகும். சமுதாயத்தில் அனைவருக்கும் கல்வி கிடைக்கவும், வேலை வாய்ப்பு கிடைக்கவும் அவற்றின் மூலம் சமவாய்ப்பு அமையவும் இந்த மே தின நன்னாளில் சூளுரை மேற்கொள்வோம். இவ்வாறு விஜயகாந்த் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ:​
அன்றுமுதல் இன்றுவரை 122 ஆண்டுகளாக மே நாள் கொண்டாடப்படுகிறது. 1896 ஆம் ஆண்டு, மாமேதை லெனின், சிறையில் இருந்தவாறு, மே முதல் நாளை, ஒரு போராட்ட தினமாக தொழிலாளர்கள் அறியச் செய்து, ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிட்டார். மனிதகுல வரலாற்றில் தொழிலாளர்கள் தங்கள் வேலை உரிமைகளுக்காக மட்டும் போராடவில்லை. அடக்குமுறையை எதிர்த்தும், சர்வாதிகாரத்தை எதிர்த்தும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இரத்தம் சிந்தினார்கள், போராடினார்கள். ரஷ்யப் புரட்சியும், சீனப்புரட்சியும், கியூபா விடுதலையும், வியட்நாம் விடுதலையும், தொழிலாளர்கள் ஆயுதம் ஏந்தியும், உயிர்த்தியாகம் செய்தும் வெற்றியை ஈட்டித் தந்த புரட்சிகள் ஆகும்.இப்போது நம் கண்ணெதிரே இலங்கைத் தீவில், கொடியவன் இராஜபக்சேயின் சிங்கள இனவாத அரசு, ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்து, கற்பனைக்கு எட்டாத மனிதப் பேரழிவை நடத்தி விட்டது. இக்கோரக் கொலைகளை நடத்திய இராஜபக்சே, உண்மையை வெளிக்கொணர்ந்து ஐ.நா. மன்றத்துக்கு அளிக்கப்பட்ட அறிக்கையை எதிர்த்து, சிங்களக் காடையர்ளை, மே 1 ஆம் நாள் கொழும்பில் திரட்டுகிறான். அவனது மண்டைக் கொழுப்புக்கும், மாபாதகத்துக்கும் மரண அடி கொடுக்க அனைத்து நாடுகளின் மனசாட்சியைத்தட்டி எழுப்ப, கொடியோனைக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க, மனித உரிமை உணர்வுடையோர் அனைவரையும், மே தினம் அறைகூவி அழைக்கிறது. பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தோனுக்கு சங்காரம் நிசமெனத் தாய்த் தமிழகத்துப் பாட்டாளி வர்க்கமும், இளையோர் கூட்டமும் சூளுரைக்கட்டும்!
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன்:
உழைக்கும் மக்களின் உரிமை முழக்கம் எழுப்பும் நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மே நந்நாளில் பங்கேற்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிகர வாழ்த்துக்கள்.
கடந்த ஆண்டில் எண்ணற்ற பெரும் இயக்கங்களை விலைவாசி உயர்வுக்கு எதிராக, சமூகக் கொடுமைகட்கு எதிராக, ஊழல்களை எதிர்த்து, மாவோயிஸ்டு ஒழிப்பு என்ற பெயரால் பழங்குடி மக்களை அழிக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து, இந்திய நாட்டின் இயற்கை கனிமவளங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படுவதை எதிர்த்து, மணற்கொள்ளையை எதிர்த்து, மின்வெட்டால் பாதிக்கப்பட்ட தொழில்களால் வேலையிழந்த தொழிலாளர் குடும்பங்களுக்காக, எனப் பல அடுக்கடுக்கான இயக்கங்களை நடத்தியது இந்தியத் தொழிலாளி வர்க்கம்.
உலக அரங்கில் ஜப்பானில் இயற்கைச் சீற்றத்தால் ஏற்பட்ட உயிர், உடமைச் சேதங்களுடன் அணுமின் நிலயம் உடைந்து கதிர் வீச்சினால் பாதிக்கப்பட்ட கோர நிகழ்ச்சி, பல நாடுகளில் சர்வாதிகார ஆட்சிகளை அகற்ற மக்கள் நடத்திய மாபெரும் கிளர்ச்சிகள் ஆகியவற்றின் அனுபவங்களையும் பெற்றுள்ள இந்தியத் தொழிலாளி வர்க்கம் 2011 மே தினத்தையும் கடைப்பிடிக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை என்ற பெயரால் வழங்கப்பட்ட ஐந்து லட்சம் கோடி, ஊழலால் இழந்த ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடியும், கடத்தி பதுக்கப்பட்ட 120 லட்சம் கோடியும் இந்திய மக்களை ஏழ்மைக்குள் தள்ளியிருப்பதையும் எதிர்த்துப் போராட இந்த மே தினத்தில் உறுதி ஏற்க வேண்டும். இலங்கை வாழ் தமிழ் குடிமக்களை கொன்றழித்த போர்க்குற்றவாளிகளை சர்வதேசச் சட்டப்படி பகிரங்க விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும், மேற்குவங்கத்தில் 1995​ல் ஆயுதங்களைக் கொண்டு வந்து விமானம் மூலம் கலவரக்காரர்களுக்குக் கொடுத்து கலவரத்தைத் தூண்ட உதவிய கட்சிகள், அதிகாரிகளை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மே தின சூளுரையாக ஏற்று வலியுறுத்த வேண்டி, மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தா.பாண்டியன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:
தொழிலாளர் தோழர்களுக்கு விடுதலை சிறுத்தைகளின் சார்பில் மே நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். தொழில் நிறுவனங்கள் பெரும்பாலானவற்றில் தொழிற்சங்க உரிமைகள் உள்ளிட்ட தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுகிற சூழல் உள்ளது. அது சரிசெய்யப்பட வேண்டும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் மோட்டார் வாகன உற்பத்தி உள்ளிட்ட அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் தொழிலாளர்களுக்குரிய உரிமைகளை பாதுகாத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.
அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு சுருங்கி போய்விட்ட நிலையில் தனியார் நிறுவனங்களே இப்போது பெரும்பாலான வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. ஆனால் அந்த நிறுவனங்கள் பெரும்பாலும் சமூகநீதிக் கொள்கைக்கு மாறான விதத்திலேயே செயல்பட்டு வருகின்றன. இந்த போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டால்தான் எதிர்காலத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களை சார்ந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற முடியும். எனவே தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை மே நாளில் விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது. தனியார் துறையில் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்ட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. தனியார் துறையில் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பரந்துபட்ட பிரச்சாரம் இயக்கம் ஒன்றை கருத்தொற்றுமை உள்ளவர்களோடு இணைந்து விடுதலைச்சிறுத்தைகள் முன்னெடுக்கு என்பதை இந்த மேநாளில் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


True Story 10 | மின்சார வாகனங்கள் உற்பத்தியில் முதலிடத்தை பிடிக்க திட்டமிடும் இந்தியா...True Story 09 | அதிக சம்பளம் வாங்கும் உலகின் 10 விளையாட்டு வீரர்கள்தேங்காய் அதிகம் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் வருமா? | Does Eating Coconut Increase Cholesterol?250 கிலோ வரை லோடும் ஏற்றலாம் | 2 in 1 Electric Scooter | Komaki X2 Electric Scooter Review in Tamilமுகப்பருவை போக்க எளிய வீட்டு மருத்துவம் | Home remedies For Pimples | புஷ்பமாரி சித்த மருத்துவர்பிரண்டையின்10 மருத்துவ குணங்கள் | Prandai 10 health benefits|Veld Grape | K.தம்பிதுரை சித்த மருத்துவர்ஒரு யூனிட் சார்ஜ் செய்தால் 30 கிலோமீட்டர் பயணம் செய்யலாம் | Hero Lectro Electric Cycle Reviewஅமெரிக்கா - ரஷ்யா இடையே நடக்கும் Cyber War | Ransomware Cyber AttackYAMAHA RX100 Styleல் அசத்தலான எலக்ட்ரிக் பைக்|5 ரூபாய்க்கு 100 கிலோமீட்டர்| Komaki MX3 E-Bike Reviewதாய் பால் கொடுப்பதால் மார்பக புற்று நோய் வராமல் தடுக்க முடியுமா? | Benefits of Mothers Milkஒரு பைசா செலவில்லாமல் ஓடும் மோட்டார் சைக்கிளை தயாரித்த மாணவர்தேனீ வளர்க்க கற்று கொடுத்து 80 பேரை லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க வைத்து அசத்தல்எனக்குEmotional Scenesல் நடிக்க ரெம்ப பிடிக்கும் சீமராஜா பட நடிகை அபிநயா | Seema Raja Actress Abhinayaஇள வயதிலேயே இந்தியன் சாம்பியன் டைட்டில் வென்ற கோம்பை நாய் |பாரம்பரிய நாய்கள் வளர்ப்பு - Part 18Whatsapp Call மூலம் பெண்களை மயக்கி பணம் கேட்டு மிரட்டல்| மாட்டிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்?நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா? இதை அவசியம் சாப்பிடுங்க | K.தம்பிதுரை சித்த மருத்துவர்22 கின்னஸ் சாதனைகளை படைத்து அசத்திய தமிழர் | 22 Guinness World Records Title WinnerKanni | வளர்த்தவர் இருந்தால் மட்டுமே குட்டி போடும் பாசமான நாய்| பாரம்பரிய நாய்கள் வளர்ப்பு - Part 17Tamil General Knowledge Questions and Answers|Brain Games Tamil|Tamil quiz | Interesting GK| Part 01பிச்சை எடுத்து 50 லட்சம் ரூபாய்க்கு மேல் தானம் செய்த பிச்சைக்காரர் |Beggar Donates 50 Lakh Rupeesவேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்யும் நபர்களிடம் ஏமாறாமல் இருப்பது எப்படி? | Job Scams


இதை ஷேர் செய்திடுங்கள்: