முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. கூட்டணிக்கு வன்னியர் கூட்டமைப்பின் நிறுவனர் ஆதரவு

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, பிப்.22 - அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வன்னியர் கூட்டமைப்பின் நிறுவனர் சி.என்.ராமமூர்த்தி நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை நிலையத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வன்னியர் கூட்டமைப்பின் நிறுவனர் சி.என்.ராமமூர்த்தி, பொதுச் செயலாளர் ஆர்.ரமணன், பொருளாளர் பி.நவமணி சீனிவாசன், முதன்மை செயலாளர் எஸ்.ஏ.விவேகானந்தன், அமைப்புச் செயலாளர் ஏ.அருள்கென்னடி ஆகியோர் நேற்று தலதைமை நிலையத்தில் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் எம்.எல்.ஏ ஆகியோரை சந்தித்து நடைபெறவுள்ள 2011 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில்  அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு தங்களது முழு ஆதரவினை தருவதாக தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்