முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்ட மேலவை உறுப்பினராக பிருத்விராஜ் சவாண் பதவியேற்பு

திங்கட்கிழமை, 2 மே 2011      இந்தியா
Image Unavailable

மும்பை, மே.- 2 - சட்ட மேலவை உறுப்பினராக அந்த மாநில முதல்வர் பிருத்விராஜ் சவாண் பதவியேற்றுக் கொண்டார்.  சட்ட மேலவை உறுப்பினர் பதவிக்கு கடந்த வாரம் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பிருத்விராஜ் சவாணை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதையடுத்து அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.
மகராஷ்டிர மாநில முதல்வராக இருந்த அசோக் சவாண், ஆதர்ஷ் வீட்டு வசதி சங்க ஊழல் வழக்கில் பதவி விலக நேர்ந்தது. இதையடுத்து பிரதமர் அலுவலக இணை அமைச்சராக இருந்த பிருத்விராஜ் சவாண் மகராஷ்டிர முதல்வராக பொறுப்பேற்றார். அரசியல் அமைப்பு சட்டத்தின் படி சட்டப் பேரவை அல்லது மேலவை உறுப்பினராக அல்லாத ஒருவர் முதல்வர் பதவியில் 6 மாதம் வரை நீடிக்கலாம். அதற்கு மேல் பதவியில் நீடிக்க வேண்டுமானால் அவர் பேரவை உறுப்பினராகவோ, மேலவை உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்படுவது அவசியம்.
பிருத்விராஜ் சவாண் முதல்வர் பதவி ஏற்கும் போது சட்டப் பேரவை அல்லது மேலவையின் உறுப்பினர் அல்ல. இதனால் அவர் இப்போது மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்