முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை

வெள்ளிக்கிழமை, 7 ஜூன் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.8 - கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை   எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வக்கீல் தேவராஜன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

தியேட்டர்களுக்கு அரசு டிக்கெட் கட்டணத்தை நிர்ணயம் செய்து கடந்த 31-12-2006-ல் அரசாணை வெளியிட்டது. அதன்படி முதல் வகுப்பு டிக்கெட்டை ரூ.85-க்கும், இரண்டாம் வகுப்பு டிக்கெட்டை ரூ.75-க்கும், 3-ம் வகுப்பு டிக்கெட்டை ரூ.10-க்கும் விற்பனை செய்ய வேண்டும். ஆனால் தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் 10 ரூபாய் டிக்கெட்களை விற்பதே இல்லை. இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகளை 100 ரூபாய்க்கும் முதல் வகுப்பு டிக்கெட்டுகளை 150 ரூபாய்க்கும் விற்கின்றனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சட்ட விரோதமாக நாள் ஒன்றுக்கு 34 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை பொது மக்களிடம் இருந்து வசூலிக்கிறார்கள். 21-7-2012 அன்று சென்னை கலெக்டரிடமும், போலீஸ் கமிஷனரிடமும் இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே கூடுதல் கட்டணம் வசூலிக்கும்  தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

மனுதாரரின் புகார் முக்கியத்துவம் வாய்ந்தது. அரசு நிர்ணயித்த சினிமா டிக்கெட் கட்டண அரசாணையை பின்பற்ற வேண்டியது தியேட்டர் உரிமையாளர்களின் கடமையாகும். அதற்கு எதிராக கூடுதல் பணம் வசூலிக்க முடியாது. கலெக்டரிடமும், போலீஸ் கமிஷனரிடமும் மனுதாரர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டியது அவர்கள் கடமையாகும். எனவே இப்புகார் குறித்து  போலீஸ் கமிஷனர் விசாரிக்க வேண்டும். விசாரணையில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்