முக்கிய செய்திகள்

வாக்கு எண்ணும் மையங்களை பொதுமக்களும் பார்வையிடலாம்-கலெக்டர் சகாயம் பேட்டி

sahayam

மதுரை,ஏப்.- 2 - வாக்கு எண்ணும் மையங்களை பொதுமக்களும் பார்வையிடலாம் என்று மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் தெரிவித்துள்ளார்.   மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான், மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மத்தி, மேற்கு ஆகிய 7 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மதுரை மருத்துவ கல்லூரி அரங்கில் நடைபெறுகிறது. க திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதி வாக்குப்பதிவு தமிழ்நாடு பாலிடெக்னிக்கிலும், உசிலம்பட்டி தொகுதி வாக்குப்பதிவு வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நடக்கிறது. இந்த மையங்களை  நேற்று தேர்தல் அலுவலரும், மதுரை மாவட்ட கலெக்டருமான சகாயம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மத்திய காவல்படை, மாநில சிறப்பு அதிரடிப்படை மற்றும் உள்ளூர் போலீசார் ஆகியோரை கொண்டு நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் துணை வட்டாட்சியர் தலைமையில் 24 மணிநேரமும் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. தொகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தினமும் இரண்டு முறை வந்து பார்த்து செல்கிறார்கள். மேலும் டிஆர்ஓ மற்றும் மாவட்ட அதிகாரிகளும் பார்வையிட்டு செல்கிறார்கள்.
   வெப் கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் உள்ள பதிவுகள் தேர்தல் பிரிவு அலுவலகத்தில் உள்ள கணினி மூலமாக கண்காணிக்கப்படுகிறது. இதனை விருப்பம் உள்ள பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் வந்து பார்வையிடலாம். தேர்தலையொட்டி மதுரை மேற்கு தொகுதியில் நடந்த சில சம்பவங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இங்கு மறு தேர்தல் நடத்த வேண்டுமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். கலெக்டருடன் தேர்தல் பிரிவு அலுவலர் குணசேகரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்: