முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் முறைகேடு: கல்மாடியிடம் சி.பி.ஐ. விசாரணை

வெள்ளிக்கிழமை, 7 ஜூன் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 8 - காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டின் போது ரூ. 70 கோடி மதிப்புள்ள மூன்று ஒப்பந்தங்கள் வழங்கியது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்க முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடியிடம் சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டது. 

2010 ம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிக்காக மோரீஷசை சேர்ந்த இகேஎஸ். என்ற நிறுவனத்துக்கு ரூ. 70 கோடி மதிப்பில் மூன்று ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. இவ்விதம் வழங்கப்பட்ட ஒப்பந்தம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இது குறித்து விசாரிக்குமாறு ஷூங்லு கமிட்டியை பிரமதர் மன்மோகன்சிங் நியமித்தார். 

நிறுவன தேர்வு முழுவதும் தகுதி அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை. ஒப்பந்தத்துக்கு நிறுவனங்களை தேர்வு செய்த விதம் வேடிக்கையாக உள்ளதாக ஷூங்லு குழு தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கிறது. காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டில் நிகழ்ந்த ஊழல் குறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ. கடந்த ஆண்டு சுரேஷ் கல்மாடி மற்றும் சங்கத்தின் உயரதிகாரிகள் மீது குற்றம் சாட்டியதோடு வழக்கும் பதிவு செய்தது. 

இந்நிலையில் கல்மாடியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ரூ. 70 கோடிக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதன் பின்னணி குறித்தும் அதில் தொடர்புடைய அதிகாரிகள் குறித்தும் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. சுமார் மூன்று மணி நேரம் நடத்தப்பட்ட இந்த விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காமன்வெல்த் போட்டி ஏற்பாடு தொடர்பாக சுரேஷ் கல்மாடி மீது மேலும் பல வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்