முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகம் சம்பாதிக்கும் பட்டியலில் தோனிக்கு 16-வது இடம்

வெள்ளிக்கிழமை, 7 ஜூன் 2013      வர்த்தகம்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 8 - அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அடங்கிய போர்ப்ஸ் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு 16வது இடம் கிடைத்துள்ளது. போர்ப்ஸ் பத்திரிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 100 வீரர், வீராங்கனைகளின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் வெறும் மூன்றே மூன்று வீராங்கனைகளின் பெயர்கள் தான் இடம்பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி 31.5 மில்லியன் டாலர் வருவாயுடன் போர்ப்ஸ் பட்டியலில் 16 வது இடத்தைப் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு இந்த பட்டியலில் தோனி 31 வது இடத்தில் இருந்தார். கோல்ப் வீரர் டைகர் உட்ஸ்(37) 78.1 மில்லியன் டாலர் வருவாயுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ரோஜர் பெடரருக்கு இரண்டாவது இடம் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் 71.5 மில்லியன் டாலர் வருவாயுடன் போர்ப்ஸ் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு இந்த பட்டியலில் பெடரர் தான் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரோபாவாவுக்கு போர்ப்ஸ் பட்டியலில் 22 வது இடம் கிடைத்துள்ளது. அவரது மதிப்பு 29 மில்லியன் டாலர் ஆகும். போர்ப்ஸ் பட்டியலில் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் 8.5 மில்லியன் டாலர் பரிசுத் தொகை உள்பட 20.5 மில்லியன் டாலர் வருவாயுடன் 68வது இடத்தில் உள்ளார். சீன டென்னிஸ் வீராங்கனை லி னா போர்ப்ஸ் பட்டியில் 85வது இடத்தில் உள்ளார். அவரது வருமானம் 18.2 மில்லியன் டாலராகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்