ஸ்ரீரங்கம் ரெங்கந”தர் கே”விலில் சித்திரை தேரே”ட்டம்

Try1

திருச்சி, மே.- 2 - ஸ்ரீரங்கம் ரெங்கந”தர் கே”விலில் சித்திரை தேரே”ட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏர”ளம”ன பக்தர்கள் திரள“க கலந்து கெ”ண்டு தேரை வடம்பிடித்து இழுத்தத்தனர். ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை தேரோட்டம் விழாவிற்காக கடந்த 23-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதை தொடர்ந்து நம்பெருமாள் நாள்தோறும் காலையும், மாலையும் பல்வேறு வாகனங்களில் திருவீதிவுலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். நேற்றுமுன்தினம் மாலை நம்பெருமாள் உபயநாச்சியாருடன் நெல் அளவு கண்டருளினார். முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நேற்று காலை 6மணிக்கு வடம்பிடிக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது ஏராளமான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா, கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் தேரை இழுத்தனர். தேர் கீழசித்திரை வீதியிலிருந்து புறப்பட்டு தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக மீண்டும் தேர் நிலைக்கு வந்தடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு வழிநெடுகிலும்  ஏராளமான நீர்மோர் பானக்கங்கள், அன்னதானங்கள் வழங்கப்பட்டது. சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. காவல்துறை உதவி ஆணையர் பழனிச்சாமி தலைமையில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ