முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் விக்ரமன் வெற்றி

திங்கட்கிழமை, 10 ஜூன் 2013      சினிமா
Image Unavailable

சென்னை, ஜூன்.11  - தமிழ்த் திரைப்பட இயக்குநர்  சங்கத் தலைவராக இயக்குநர்  விக்ரமன்  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  கடந்த முறை இயக்குநர்  சங்கத் தலைவராக  பதவி வகித்த   இயக்குநர்   பாரதி ராஜாவின்  பதவிக்காலம்  முடிவடைந்ததை  அடுத்து  இயக்குநர் சங்கத்தின்  புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  இதில், இயக்குநர்கள் விக்ரமன்,  விசு தலைமையில்  இரு அணிகளாக  களத்தில்  நின்றனர். ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது.  உயர்நீதிமன்ற  வழக்குரைஞர்  செந்தில் நாதன்   கண்காணிப்பில்   நடைபெற்ற  வாக்குப்பதிவில்  இயக்குநர்  சங்கத்தைச் சேர்ந்த  1200 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வாக்களித்தனர்.  இதன் வாக்கு எண்ணிக்கை  மாலை  6 மணிக்கு  மேல் தொடங்கியது. 10 பிரிவுகளாக  நடைபெற்ற  வாக்கு  எண்ணிக்கையின் முடிவு இரவு 9.45 மணிக்கு மேல் அறிவிக்கப்பட்டது.  இதில், முதல்கட்டமாக தலைவர்  பதவிக்கான  முடிவு மட்டும் அறிவிக்கப்பட்டது.  இயக்குநர்  விக்ரமன்   717 வாக்குகள்  பெற்று  வெற்றி பெற்றார். இயக்குநர் விசு  562 வாக்குகள்  பெற்று தோல்வி அடைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்