முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் சங்கத்தை அரசே ஏற்க ஐகோர்ட்டில் மனுதாக்கல்

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.12 - தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை அரசே ஏற்று நடத்த உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில்  பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள சிங்காரவேலர் நினைவு கிரிக்கெட் மன்றத்தின் தலைவர் கதிரவன் சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சென்னை சேப்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் செயல்பட்டு வருகிறது. கிரிக்கெட் விளையாட்டை ஊக்கப்படுத்துவது தான் இச்சங்கத்தின் நோக்கம். ஆனால் சமீபகாலமாக இதன் செயல்பாடுகள் பெரும் அதிர்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நுழைந்து, அனைத்தையும்  ஆட்டிவைக்கிறது. சூதாட்டத்தில் ்டுபட்டது தொடர்பாக ஸ்ரீசாந்த் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கிரிக்கெட்டில் விளையாட்டில் புகுந்து பெரும்புள்ளிகளும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்ளும் சூதாட்டத்தில் ்டுபட்டு வருகின்றனர்.  மேலும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் சாதார ணமானவர்கள் உறுப்பினர்களாக ஆவது இயலாத காரியமாகிவிட்டது. இது பற்றி மே 29ம் தேதி அரசிடம் புகார் கொடுத்துள்ளேன்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அச்சங்கத்தை அரசே ஏற்று நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு விரைவில் விசார ணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்