முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் டிராபி: பாக்.கை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

பர்மிங்ஹாம், ஜூன். 12 - சாம்பியன்ஸ்  டிராபி கிரிக்கெட்  போட்டியில்  பாகிஸ்தானுக்கு  எதிரான  ஆட்டத்தில்  தென் ஆப்பிரிக்கா அணி  67 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.  இங்கிலாந்தின்  பர்மிங்ஹாமில்  திங்கள்கிழமை நடைபெற்ற  இந்த ஆட்டத்தில்   டாஸ் வென்ற  தென் ஆப்பிரிக்க  அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு  செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில்  அந்த  அணி 9 விக்கெட்  இழப்புக்கு  234 ரன்கள் எடுத்தது. அந்த அணியில்  அதிகபட்சமாக  அணியில்  அதிகபட்ச மாக  ஹசீம் ஆம்லா 81 ரன்கள் எடுத்தார்.  இந்த ஆட்டத்தில்  தென் ஆப்பிரிக்கா  வீரர்கள்  4 பேர் ரன் அவுட்டானார்கள். தோல்வி : பின்னர்  பேட் செய்த  பாகிஸ்தான்  அணியின் தொடக்க விக்கெட்டுகளை   விரைவில்  வெளியேற்றினார்.  கிறிஸ்  மோரிஸ். இதனால்  48 ரன்களுக்கு  தனது  முக்கியமான  3 விக்கெட்டுகளை இழந்து  தடுமாறியது.  தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா வீரர்கள்  சிறப்பாகப் பந்து வீசினர்.  பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா  உல் ஹக் சிறிது நேரம்  போராடினார்.  55 ரன்கள்   எடுத்திருந்த போது அவரும்  ஆட்டமிழந்தார்.  இறுதியில்  அந்த அணி  45 ஓவரில்  அனைத்து  விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.  தென் ஆப்பிரிக்கத் தரப்பில் மெக்லாரன் 8 ஓவர்கள்  வீசி  19  ரன்களை  

மட்டுமே அளித்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

பாகிஸ்தானுக்கு  சிக்கல்:  இப்போட்டியில் பாகிஸ்தான்  தோற்றதன் மூலம்  அரையிறுதிக்கு முன்னேறுவதில்  சிக்கல் ஏற்பட்டுள்ளது.  அந்த அணி  தனது  முதல் ஆட்டத்தில்    மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம்  தோற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.  பாகிஸ்தான்  அணி வரும்  15 ​ -  ம் தேதி நடைபெறும்  தனது  கடைசி லீக் ஆட்டத்தில்  இந்திய அணியை  எதிர்கொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்