முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உறுப்பினர்களை சேர்ப்பதில் முழுமையாக ஈடுபட உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன். 12  - அ.தி.மு.க.வுக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பதில் கட்சியினர் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று கட்சியினருக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் அமைப்புகளுக்கான தேர்தல் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடத்த வேண்டும். அதன்படி அ.தி.மு.க.வில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிக்கவும், புதிய உறுப்பினர்களை சேர்க்கவும் தேவையான பணிகள் நடைபெறவுள்ளன. புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் புதுப்பித்தலுக்கான விண்ணப்ப படிவங்கள் வரும் 13 ம் தேதி முதல் வழங்கப்படும். விண்ணப்ப படிவங்கள் அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் வழங்கப்படும். விண்ணப்ப படிவங்களை உரிய கட்டண தொகையுடன் ஜூலை 7 ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தால் பெறப்பட்ட பிறகு அதற்கான உறுப்பினர் உரிமை சீட்டுகள் வழங்கப்படும். 

உறுப்பினர் உரிமை சீட்டுகளை பெற்றுள்ள கட்சியினர் மட்டுமே அமைப்பு தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் தகுதி பெற்றவர்கள். கட்சியின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், புதுவை, கர்நாடகம், ஆந்திரம், மகராஷ்டிரம், கேரளம், புது டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த நிர்வாகிகளும் கட்சியினரும் தலைமை அலுவலகத்தில் இருந்து விண்ணப்பங்களை பெற்று செல்லலாம். 

தங்கள் பகுதியில் ஏற்கனவே கட்சி உறுப்பினர்களாக இருப்போர் பதிவை புதுப்பிக்கும் பணியிலும், புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியிலும் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். உறுப்பினர் சேர்ப்புக்கான ஒரு படிவம் மற்றும் உறுப்பினர் உரிமை சீட்டு ஆகியவற்றுக்கான கட்டணம் ரூ. 10(தமிழகம்). பிற மாநிலங்களுக்கு ரூ. 5. ஒரு படிவத்தில் 25 பேர் வரை சேர்க்கலாம் என கட்சியின் பொருளாளர் ஓ. பன்னீர் செல்வம் தனியாக வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago