முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொத்தடிமைகளை பாதுகாப்பதற்காக `பந்துவா 1947' பிரச்சாரம்

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.12 - கொத்தடிமைத் தொழிலாளர் முறை என்பது, அதிக கவனம்  பெறவேண்டிய மனித உரிமைகள் பிரச்சனைகளுள் ஒன்றாக இருக்கிறது.    எனினும், மிக்குறைவாக புரிந்துகொள்ளப்பட்ட பிரச்சனையாகவும் அது இருக்கிறது. கொத்தடிமைத் தொழிலாளர் முறை (ஒழிப்பு) சட்டம்), 1976 (பிஎல்ஏ) என்ற புரட்சிகரமான நிகழ்வு நடந்தேறியபோதிலும் இன்றைக்கும் இந்தியாவில், 40 மில்லியன் கொத்தடிமைத் தொழிலாளர்கள் இன்னும் இருக்கின்றனர் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் மதிப்பீடு செய்திருக்கிறது.

ஆக்ஷன் எய்டு இந்தியா, இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன்  மற்றும் தேசிய ஆதிவாசிகள் தோழமைக் கழகம் ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து பந்துவா 1947 பிரச்சார இயக்கத்தின் தமிழ்நாடு மாநில செயல்பாட்டை தொடங்கியிருக்கின்றன.

பாதிப்பிற்கு உள்ளாகக்கூடிய தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காகவும், மனித உரிமைகளின் பாதுகாப்பிற்காக கொத்தடிமை தொழில் ஒழிப்பு சட்டத்தினை அமலாக்கம் செய்வதற்காகவும் அரசிடம் தேசிய அளவில் வலியுறுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் குறிக்கோளை பந்துவா 1947 பிரச்சார திட்டம் முனைப்புடன் முன்னெடுத்துச் செல்கிறது.

தமிழ்நாட்டில் கொத்தடிமை தொழிலாளர் முறை இருந்துவரும் நிகழ்வை விவாதிக்கும்போது, ஐஜெஎம் அமைப்பின் அரசு  தொடர்புத்துறையின் இயக்குனர் ஹெப்சிபா சுந்தர், இன்றைய நாள்வரை தமிழ்நாட்டில் என்ஏஎஸ்சி மற்றும் ஐஜெஎம் ஆல் 405 என்ற எண்ணிக்கையில் கொத்தடிமைத் தொழிலாளர்கள், அதிகாரபூர்வ விடுவிப்பு சான்றிதழ்களுடன் இந்த அடிமைத் தளையிலிருந்து  விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதிகாரபூர்வமாக விடுவிக்கப்பட்டவர்கள் அல்லாமல், 510 கொத்தடிமைத் தொழிலாளர்கள் அவர்கள் பணியாற்றிய முதலாளிகளாலேயே விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். என்ஏஎஸ்சி, ஐஜெஎம் ஆகியவற்றின் தொடர்ச்சியான மீட்பு நடவடிக்கைகளின் இரண்டாம் நிலை தாக்கத்தின் காரணமாகவும் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் குறித்த நேரத்தில் எடுக்கப்பட்ட தலையீட்டு நடவடிக்கைகள் காரணமாகவும் இந்த விடுவிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி பல்வேறு மாவட்டங்களில் 11 கண்காணிப்பு குழு அதிகாரிகளை நியமனம் செய்ததன் வழியாக மிக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்திருக்கிறது என்று கூறினார்.

என்ஏஎஸ்சி-ன் தேசிய அமைப்பாளரான டாக்டர் கிருஷ்ணன், திறன்மிக்க வகையில் சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு, கொத்தடிமைத் தொழிலாளர் முறையால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது, விடுவிப்பது மற்றும் மறுவாழ்வு வழங்கும் செயல்பாடுகளை ஒரே சீரான நடைமுறைகள் வழிநடத்த வேண்டும். தற்போதைய பணியாற்றும் சூழ்நிலைகள், உலகமயமாக்கல் மற்றும் தனியார் மயமாக்கல் போன்ற நிகழ்வுகளின் அடிப்படையிலும் இச்சட்டமானது, மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago