முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலை வழக்கு: சல்மானின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2013      சினிமா
Image Unavailable

 

மும்பை, ஜூன்.12 - சாலையோரத்தில் படுத்திருந்தவர்கள்  மீது காரை ஏற்றி கொலை செய்த  வழக்கில்   நடிகர்  சல்மான்  கான்  தாக்கல் செய்த  மனு மீதான தீர்ப்பு  ஜூன்  24 ம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டது. 2002 ​- ம்  ஆண்டில்  குடிபோதையில்   காரை  ஓட்டிச் சென்ற  சல்மான்கான்,  சாலையோரத்தில் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றினார். இதில் ஒருவர்  உயிரிழந்தார்.  4 பேர்  படுகாயமடைந்தனர்.  சல்மான் கான் அங்கிருந்து  தப்பி  ஓடி விட்டார். இது தொடர்பான  வழக்கு   மும்பை  மாஜிஸ்திரேட்   நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில்,  கவனக்குறைவாக  செயல்பட்டு  விபத்தை  ஏற்படுத்தும்  பிரிவின் கீழ்  முதலில்  வழக்குப் பதிவு  செய்யப்பட்டது.   இப்பிரிவின் கீழ்  அதிகபட்சம்  2 ஆண்டுகள் மட்டுமே  சிறைத் தண்டனை வழங்க  முடியும். 

ஆனால்,  17 சாட்சிகளை  விசாரித்தபின்,திடீர்  திருப்பமாக  மரணம்  விளைவிக்கும் குற்றத்தில்  ஈடுபட்ட  பிரிவின்  கீழும்  சல்மான்  மீது  வழக்குப் பதிவு செய்ய   மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.  இப்பிரிவின்கீழ்   அதிகபட்சம்  10 ஆண்டுகள்  வரை  சிறைத் தண்டனை  கிடைக்கும்.  சல்மான்  குடிபோதையில்  காரை ஓட்டினார்.  போலீஸாரின்  எச்சரிக்கையை   மீறி அதிவேகத்தில்  காரில்  சென்றுள்ளார் என்ற  குற்றச்சாட்டுகளுக்கு  அரசுத் தரப்பில்   ஆதாரங்கள்   சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில்,  கடுமையான  தண்டனைகள்   கிடைக்கும்  பிரிவின் கீழ்  வழக்கு  மாற்றப்பட்டதை   எதிர்த்து  சல்மான்  சார்பில்  செஷன்ஸ்  நீதிமன்றத்தில்   மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனு மீதான  தீர்ப்பு திங்கள்கிழமை  வெளியாக இருந்தது.  ஆனால் மும்பையில் கனமழை  பெய்ததன்  காரணமாக  நீதிமன்றப் பணியாளர்கள்  பலர் பணிக்கு  வரவில்லை.  இதனால்  இந்த வழக்கின்  தீர்ப்பு  ஜூன் 24 ​- ம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago