முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோல்ப் விளையாட்டிலும் சூதாட்டத்தில் ஈடுபட்ட அகர்வால்

புதன்கிழமை, 12 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன். 13 - ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக சென்னையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் பிடியில் சிக்கியுள்ள விக்ரம் அகர்வால் கோடீஸ்வரர்களின் விளையாட்டான 'கோல்ப்' விளையாட்டிலும் சுதைாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பணக்காரர்களால் மட்டுமே விளையாடப்படும் கோல்ப் விளையாட்டிலும் கிரிக்கெட்டில் பணத்தை கொட்டியதுபோல விக்ரம் அகர்வால் கொட்டியிருப்பது அம்பலமாகியுள்ளது.

இந்த விளையாட்டிலும் யார் ஜெயிப்பார்கள் என்பது பற்றி கிளப் உறுப்பினர்கள் பலரும் பணம் கட்டி ஏமாந்துள்ளனர். ஒரு விளையாட்டுக்கு ரூ.20 லட்சம் வரை விக்ரம் அகர்வால் பணம் கட்டியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுபோன்று விளையாட்டுகளில் சுதைாட்டத்தில் ஈடுபடுபவர்களை 2 வகைகளாக பிரிக்கலாம். ஒரு சிலர் சூதாட்டத்தில் பணத்தை மட்டுமே கட்டுபவர்களாக இருப்பார்கள். அது விளையாட்டு சட்டப்படி ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றமாகவே தொடர்கிறது. விக்ரம் அகர்வால் இதுபோன்ற குற்றவாளியாகத்தான் இதுவரை உள்ளார் என்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் ஒருவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில் இதுபோன்ற ஆட்களை வைத்து சூதாட்டத்தை நடத்துவது சட்டவிரோதமாக கருதப்படுகிறது. வடமாநிலத்தை சேர்ந்த விக்ரம் அகர்வால் 1980-ம் ஆண்டு 100 ரூபாயுடன் சென்னை வந்ததாக கூறப்படுகிறது. இன்று அவர் பல கோடிகளுக்கு அதிபதி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இந்த சொத்துக்களை விக்ரம் அகர்வால் குவித்தது எப்படி? என்பது பற்றியும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனக்கு சொந்தமான ஓட்டலை விக்ரம் அகர்வால் விற்பனை செய்யவும் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஐ.பி.எல். 6-வது சீசன் தொடங்கியது. அதில் இருந்து அவர் பின்வாங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே விக்ரமின் ஓட்டலில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி சுதைாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை திரட்டினர். விக்ரம் அகர்வாலின் ஓட்டல் அறையில் சூதாட்டத்துக்கென்றே தனியாக ஒரு அறையை ஒதுக்கி வைத்திருந்துள்ளனர். இங்கு வைத்துதான் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.

நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட விக்ரம் அகர்வால் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது 3 நாட்கள் அவரை காவலில் எடுத்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விக்ரம் அகர்வால் போனில் யார்-யாருடன் பேசினார் என்பது பற்றிய தகவல்களும் திரட்டப்பட்டன. அப்போது குறிப்பிட்ட சிலரிடம் அவர் தொடர்ந்து பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் யார் என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நாளை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் விக்ரம் அகர்வால் பின்னர் சிறையில் அடைக்கப்படுகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்