முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெக்கானிக் ஷெட்டில் நிற்கும் பள்ளிக்கூட வாகனங்கள்

புதன்கிழமை, 12 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.13 - சேலையூரில் கடந்த ஆண்டு பள்ளி வாகனத்தின் ஓட்டை வழியே தவறி விழுந்து சிறுமி பலியான சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் துரதிருஷ்டவசமாக பள்ளி மாணவ- மாணவிகள் தொடர்ச்சியாக விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவங்களும் நடைபெற்றன. இதை தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் பள்ளி வாகனங்களின் வடிவமைப்பு மாற்றங்களை செய்தும் கட்டுப்பாடுகளை விதித்தும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. பல தனியார் பள்ளிகள் இதனை கண்டு கொள்ளாமல் வழக்கம்போல பள்ளி வாகனங்களை தகுதிச் சான்று பெறுவதற்கு அனுப்பி வைத்தன.

ஆனால், போக்குவரத்து துறை அதிகாரிகள் அரசு உத்தரவிட்டுள்ளபடி வாகனங்களில் மாற்றங்களை செய்துவிட்டு வந்தால்தான் தகுதிச் சான்று தரமுடியும் என்று கூறிவிட்டனர்.

வாகனத்தின் பின்னால் 2 வாயிற்கதவுகளை அமைக்க வேண்டும். வேகக்கட்டுப்பாட்டு கருவியை பொறுத்தியிருக்க வேண்டும். வாகனத்தின் முன்னும் பின்னும் பள்ளி வாகனம் என்று எழுத வேண்டும் என்பது போன்ற 10-க்கும் மேற்பட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றி வாகனங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கட்டாயமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற வேலைகளுக்காக பள்ளிக்கூட வேன்கள் மெக்கானிக் ஷெட்டுகளில் நின்று கொண்டிருக்கின்றன.

பள்ளிகள் திறந்து 3 நாட்களாகியும் பள்ளி நிர்வாகத்தினர் பாராமுகமாக இருப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். எனவே இதுபோன்ற பள்ளிகளை கண்டறிந்து வாகன தணிக்கையை விரைந்து முடித்து கொடுக்க வேண்டும் என்றும் போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை (14-ந் தேதி)க்குள் பள்ளி வாகனங்கள் தகுதிச் சான்றிதழை பெறவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்