முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலவச திருமணம்: ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்தார்

புதன்கிழமை, 12 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.13 - முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை யொட்டி 65 ஜோடிகளுக்கு இலவச திருமணம் பாலகங்கா எம்.பி. ஏற்பாட்டில் நடைபெற்றது. அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருமணத்தை நடத்தி வைத்தார். முதல்வர் ஜெயலலிதா 65-வது பிறந்தநாள் விழா அ.தி.மு.க.வினரால் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று சென்னை பிராட்வே சாலையில்  உள்ள பாரதி அரசு மகளிர் கல்லூரியில் மைதானத்தில் 65 கோடிகளுக்கு இலவச திருமணம் செயது வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வடசென்னை தெற்கு மாவட்டக்கழகம் சார்பாக இதற்கான ஏற்பாட்டை மாவட்டச்செயலாளர் நா.பாலகங்கா எம்.பி. செய்து இருந்தார். காலை 8 மணிக்கெல்லாம் மேடையில் 65 ஜோடி மணமக்களும் வந்து அமர்ந்தார்கள். விழாக்குழுவினர் கொடுத்திருந்த பட்டிவேட்டி, பட்டுசட்டையை மணமகன்கள் அணிந்திருந்தார்கள். பட்டு சேலை, பட்டு ஜாக்கெட்டை மணமகள் அணிந்திருந்தார்கள். மணமக்கள்கள் மாலையும், கழுத்துமாக வந்திருந்தார்கள்.

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மணமக்களுக்கு தாலு எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். ஒரே நேரத்தில் 65 மணமகன்களும் அவரவர் மணமகள் கழுத்தில்  தாலியை கட்டினார்கள். 4 கிராம்  தங்கத்தில் செய்யப்பட்ட தாலி சரடு கொண்ட தங்கத்தாலியை ஒவ்வொரு  ஜோடிக்கும்  விழாக்குழு சார்பாக வழங்கியிருந்தார்கள். அவைத்தலைவர் மதுசூதனன், உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், மாநகர மேயர்.சைதை.துரைசாமி ஆகியோர் முன்னிலையில் இந்த திருமண விழா நடைபெற்றது.

ஒவ்வொரு ஜோடிக்கும், இரும்புக்கட்டில், மெத்தை, பீரோ, மிக்சி, கிரைண்டர் மற்றும் எவர்சில்வர் பாத்திரங்கள் இப்படி 65 வகையான சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மணமக்களை வாழ்த்தி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

25 ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக முதல்வர் இருந்து கட்சியை கட்டி காப்பாற்றி வருகிறார். அவர் எத்தனையோ சோதனைகளை தாங்கிக்கொண்டு பல சாதனைகளைப் புரிந்திருக்கிறார்.

இந்த 2 ஆண்டு கால ஆட்சியில் முதல்வரின் ஆட்சி எல்லாத்துறைகளிலும் சாதனை படைத்து உள்ளது. மக்களின் தேவைகளை நூற்றுக்கு நூறு இந்த அரசு நிறைவேற்றியுள்ளது. மற்றத்தலைவர்கள் தங்களுடைய பிறந்தநாள் விழாக்களை ஆடம்பர விழாக்களாக கொண்டாடுகிறார்கள். ஆனால் முதல்வர் தன்னுடைய பிறந்தநாளில் ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்யும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இத்தகைய நல்லெண்ணம் கொண்ட ஒரே தலைவர் நம்முடைய முதல்வர்தான். சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக பட்ஜெட்டில் ரூ.41,000 கோடியை இந்த அரசு ஒதுக்கியுள்ளது. மற்ற எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு நல்ல திட்டங்களுக்காக முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்கிறார். சொன்னதை உடனே நிறைவேற்றுகிறார்.

நமக்காக வாழ்ந்து, நமக்காக பாடுபடும் முதல்வர் நீடுழி வாழ வேண்டும். எதிர்கால இந்தியா முதல்வரின் தலைமையில் செயல்படக்கூடிய நிலை உருவாக வேண்டும். அதற்கு தமிழக மக்கள் 40 தொகுதிகளிலும் அம்மாவை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில் வடசென்னை தெற்கு மாவட்ட கழகச்செயலாளர் நா.பாலகங்கா பேசும்போது, முதல்வரின் பிறந்தநாள் நமக்கெல்லாம் பொன்னாள். ஏழை எளியவர்களுககு நன்னாள். அவர் பிறந்தநாளையொட்டி கழகத்தின் பல உதவிகளை ஏழை, எளியவர்களுக்கு செய்து வருகிறார்கள். அதற்கெல்லாம் முத்தாய்ப்பாக நேற்று 65 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

புதிய இல்லற வாழ்வில் ஈடுபடும் அவர்களுக்கு நாம் ஒரு இனிமையான தொடக்கத்தை ஏற்படுத்தி கனவுகளை நாம் நனவாக்கிக் காட்டுவோம் என்று கூறினார்.

இந்த 65 ஜோடி திருமண விழாவுக்கு ஏற்பாடு செய்தவர் மாவட்டச்செயலாளர் பாலகங்கா நேற்று விழா நடந்த பாரதி மகளிர் கல்லூரி வட்டாரம் முழுவதும் கொடி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. திருமண பந்தலைச் சுற்றி பெரிய அளவிளான முதல்வர் ஜெயலலிதா படங்களை அச்சிடப்பட்ட பேனர்களை ராயபுரம் பகுதி செயலாளர் சி.பி.ராமஜெயம், அண்ணா தொழிற் சங்க நிர்வாகிகள் கே.எம்.ஜெயசேகர், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணைச்செயலாளர் ஆர்.எம்.டி.ரவீந்திரஜெயன் ஆகியோர் அமைத்து இருந்தார்கள்.

இன்னிசை கச்சேரி நடத்து, மேளதாளங்கள் முழுங்கின. சைதை.ஜி.சாரதி, மயிலம் ராஜேஷ் கண்ணா, எம்.இஸ்மாயில் கனி, முகமது இம்தியாஸ், சாகுல் அமீது, பி.பி.விஷ்ணுகுமார், சி.கே.வில்வம் உள்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்