முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைர விழா கட்டிடத்திற்க்கு தமிழக அரசு ரூ.5 கோடி நிதியுதவி

புதன்கிழமை, 12 ஜூன் 2013      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூன்.13 - அடையார் புற்றுநோய் சிகிச்சை மைய வைர விழா நிகழ்ச்சிகளை முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். வைர விழா கட்டிடத்திற்கு ரூ.5 கோடி நிதியை தமிழக அரசின் சார்பில் அளிப்பதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அடையார் புற்று நோய் சிகிச்சை மையம் தொடங்கி 60 ஆண்டுகள் ஆவதையொட்டி வைர விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த நிகழ்ச்சிகளை முதல்வர் ஜெயலலிதா நேற்று மாலை துவக்கி வைத்தார். மேலும், தமிழ்நாடு புற்றுநோய் பதிவக பெரும் திட்டம் உட்பட மூன்று திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

மக்களை புற்றுநோய் என்ற உயிர் கொள்ளியின் பிடியிலிருந்து காப்பாற்ற தன்னை மீண்டும் அற்பணித்துக்கொள்ளும் இந்த நிறுவனத்தின் சிறப்பான நிகழ்ச்சியில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியிடுகின்றேன். மருந்து ஒரு கலை வணிகம் அல்ல ஒரு அழைப்பு வியாபாரம் அல்ல தலையுடன் இதயமும் சேர்ந்து பணியாற்றும் ஒரு குரல் என்று சர் வில்லியன் ஓசுலர் தெரிவித்தார். இந்த புற்றுநோய் நிறுவனம் தன்னுடைய செயல் திட்டங்களுக்கு மிகவும் சேவை அளித்துள்ளது. 60 ஆண்டுகளாக நீடிப்பதின் முலம் இது வாழ்ந்து வருகிறது. 

புகழ்மிக்க சாதனையாளர் டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி, நிறுவிய இந்த நிறுவனம் 1954 ஜூலை 14-ல் துவக்கப்பட்டது. புன்னியகோடி முதலியார் என்பவர் இதற்கான நிலங்களை அளித்தார். ஒரு பெண் தன்னிச்சையாக சிந்திக்கக் கூடாது என்று இருந்த காலத்தில் டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி ஒரு சகாப்தமாக திகழ்ந்தார். 1912-ல் அவர் இந்தியாவிலேயே முதல் பெண் டாக்டராக உருவானார். 1927-ல் முதல் பெண் எம்.எஸ்.சி ஆனார். இந்திய பெண்களிடம் சட்டசபை உறுப்பினராக சமுக சீர்திருத்த வாதியாக அவருடைய சாதனைகள் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இவரை மதிக்கும் பொருட்டு தமிழக அரசு முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தை கொண்டு வந்தது. 2011-ல் நான் முதல்வராக வந்த பிறகு இந்த திட்டத்திற்கான நிதி உதவியை ரூ.1200 ஆயிரமாக உயர்த்தினேன். இதனால் மகப்பேறு காலத்தில் பெண்களின் வருமான இழப்பை ஈடு செய்யமுடிந்தது. மருத்துவமனைகளில் பிரசவம் அதிகரித்தது. பிரசவ கால தாய் மற்றும் குழந்தைகளின் மரணம் தவிர்க்கப்பட்டது. ஆண்டு தோறும் இதனால் 6 லட்சம் தாய்மார்கள் பயனடைகிறார்கள். இத்திட்டத்திற்கு 625.51 கோடி ரூபாய் இது வரை விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு இந்த திட்டத்திற்கு ரூ.720 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1942 இந்த மருத்துவமனையை துவக்கியபோது சேவா கிராமம் பாணியில் 12 படுக்கைகள் இருந்தது தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. 

டாக்டர் சாந்தா தன்னை இந்த நிறுவனத்திற்காக அர்ப்பனித்துக்கொண்டார்.  அவரது பெயர் இந்த மருத்துவணனையிடம் போது பின்னி பிணைந்தது. முத்துலட்சுமி ரெட்டி இந்த மருத்துவமனை துவக்கியபோது டாக்டர்.சாந்தா தன்னுடைய மருத்துவம படிப்பை முடித்திருந்தார். 1955-ல் புற்றுநோய் மருத்துவமனையில் சேர்ந்தார். இந்த மருத்துவமனை வளர்ச்சியில் டாக்டர்.கிருஷ்ணமூர்த்தியோடு சேர்ந்து டாக்டர்.சாந்தா மிகபெரிய பங்கை அளித்துள்ளார். அவர் மீது நான் தனிப்பட்ட முறையில் மிகுந்த மரியாதை கொண்டுள்ளேன். 

சமூக சீர்த்திருத்தம் பெண்களின் மேம்பாடு குழந்தைகள் நலன் மற்றும் பல துறைகளின் பலமாக விளங்கும் பெண்களுக்காக நான் அவ்வையார் விருதை நிறுவினேன். 2013-ல் 13-ஆம் ஆண்டுக்கான அவ்வையார் விருதை டாக்டர். சாந்தாவிற்கு நான் வழங்கியது மிகவும் பொருத்தமானதாகும்.

மருத்துவமனை ஆராய்ச்சி பிரிவில் மற்றும் கல்வி வசதிகளுடன் இந்த மருத்துவமனை மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. அளவற்ற திறமை மற்றும் தகுதியுடன் குணப்படுத்துவதில் தொடர்ந்து சகாப்தம் படைத்து வரும் இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.

புற்றுநோய் நோயாளிகள் அவர்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவரின் மீதும் அந்த நோயின் அச்சத்தையும், துன்பத்தையும், மனஉளச்சலையும் தரக்கூடியது. அதற்கான செலவு அதைவிட மிகப்பெரியது. இவற்றையெல்லாம் குறைப்பதற்காக பல தலை முறைகளுக்கு முன்னாலேயே ஒரு முறையை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய சாதனையாகும். 

தமிழகத்தை பொருத்த வரையில் மக்களின் ஆரோக்கியத்திற்கு நான் முன்னுரிமை அளித்து வருகிறேன். குழந்தைகள் நலத்திட்டம், தேசிய ஊரக சுகாதார செயல்திட்டம் ஆகியவற்றில் தமிழகம் முன்னிலை வகிக்கும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. முதலமைச்சரின் முழுமையான மருத்துவ காப்பீடு திட்டம் நவீன முறையில் துவக்கப்பட்டுள்ளது. நமது முதல் நோக்கம் பொது சுகாதாரத்தில் கவனம் செலுத்துவது, நோய்களை தடுப்பது ஆகும்.

தமிழக மக்களின் சமூக பொருளாதார பின்னனிகளை பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் சமமான முறையில் மருத்துவ உதவிகள் கிடைக்க செய்வது என்னுடைய தலையாய கொள்கை ஆகும். 

இந்த நிறுவனத்தின் பராமரிப்பு செலவிற்காக 1981-82-ல் இருந்து ரூ.9 லட்சம் மானியம் வழங்கப்பட்டது. 1992-93-ல் இருந்து மறுபரிசீலனை செய்து 10 சதவீதம் அதிகரிப்புடன் மானியம் வழங்கப்பட்டது. இதனால் 2012-13-ல் ரூ.1.75 கோடி வழங்கப்பட்டது. சமீபத்தில் டாக்டர் சாந்தா கேட்டுக்கொண்டதின் பேரில் ரூ.2.5 கோடி வழங்கப்பட்டது. எதிர்காலத்தில் இது 15 சதவீதம் அதிகரிப்புடன் வழங்கப்படும்.

இந்த நிறுவனத்தின் வெற்றிகரமான முன்முயற்சியை கருத்தில் கொண்டு எல்லா மாவட்டங்களுக்கும் இந்த திட்டத்தை விரிவு படுத்த ரூ.15 கோடியை நான் ஒதுக்கியுள்ளேன். சிறப்பான சிகிச்சை மையமாக இந்த நிறுவனத்தை உயர்த்துவதற்கு உதவ வேண்டும் என்று டாக்டர் சாந்தா கேட்டுக்கொண்டதை அடுத்து மத்திய அரசுக்கு நான் எழுதியுள்ளேன். சிறப்பான மையம் என்பது சுய அதிகாரம் பெற்ற தேசிய புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனமாக இயங்குவதுதான். அந்த அனுமதி கிடைக்காவிட்டால் கண்டிப்பாக அடுத்த ஆண்டுக்குள் அந்த அனுமதி மத்திய அரசிடம் இருந்து நான் பெற்று தருவேன் என்று உறுதி கூறுகிறேன்.

மனிதாபிமானத்தோடும், தெளிந்த அறிவுடனும் இந்த நிறுவனம் 60 ஆண்டுகளை கடந்து வந்துள்ளது. எல்லோருக்கும் சேவை என்பதே தாரக மந்திரம். இது அதிசயங்களின் நிகழ்விடம். பதற்றமான அச்சம் நிறைந்த குடும்பங்களுக்கு மென்மையாக சிகிச்சை அளித்து நம்பிக்கை ஊட்டுகின்றனவர்கள் இங்குள்ள மருத்துவர்களும், ஊழியர்களும். அதியங்களை நிகழ்த்துவதே அவர்களது திறமையின் சாதனைகள். மரணத்தின் பிடியில் இருந்து உயிரை காப்பாற்றுகிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர் வாழ உரிமை உண்டு என்பதை இவர்கள் நிரூபிக்கிறார்கள். 

இந்நிறுவனத்தின் வைரவிழா கட்டிடம் கட்ட தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி சிறப்பு நிதி அளிக்கப்படும் என்பதை மறக்கமுடியாத இந்த நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஐ.எம்.ஜி. நிறுவனத்தின் தலைவர் சுகல்சந்த் ஜெயின் வரவேற்று பேசினார். அடையாறு புற்று நோய் சிகிச்சை மையத்தின் மூத்த உறுப்பினரும்,சமூக சேவகியுமான சரோஜினி வரதப்பன், புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் வி.சாந்தா வாழ்த்துரை வழங்கினார். அதன் இயக்குனர் டாக்டர் டி.ஜி.சாகர் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago