முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடன் கொல்லப்பட்டதற்கு உலக நாடுகள் அமோக வரவேற்பு

திங்கட்கிழமை, 2 மே 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மே.3 - அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவன் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதற்கு இந்தியா உள்பட உலக நாடுகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளன. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க படைகள் ஹெலிகாப்டர் மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் பின்லேடன் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். உடனே பின்லேடன் உடலை அமெரிக்க படைகள் எடுத்துச்சென்றன. அது பின்லேடனா என்பதை உறுதி செய்ய மரபு அணு சோதனை நடத்தப்படும் என்று முதலில் அமெரிக்கா தெரிவித்தது. பின்னர் அவனது உடலை அடக்கம் செய்தால் அவனுடைய ஆதரவாளர்கள் சமாதியில் வணங்க தொடங்கிவிடுவார்கள் என்று கருதிய அமெரிக்க படைகள்,உடலை கடலில் தூக்கி எறிந்துவிட்டன. 

பின்லேடன் கொல்லப்பட்டதற்கு இந்தியா,ஆஸ்திரேலியா, ஜப்பான்,இங்கிலாந்து உள்பட உலக நாடுகள் வரவேற்றுள்ளன. பின்லேடன் கொல்லப்பட்டிருப்பது உலக சாதனை என்றும் பாகிஸ்தானில் இதர தீவிரவாத அமைப்பு தலைவர்களும் கொல்லப்படுவார்கள் என்றும் இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. பின்லேடன் கொல்லப்பட்டிருப்பதற்கு அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஆஸ்திரேலியாவின் பெண் பிரதமர் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார். ஜப்பான், இங்கிலாந்து ஆகிய நாடுகளும் பின்லேடன் கொல்லப்பட்டதை வரவேற்றுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்