முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூலை 2-ல் கூட்டுறவுச் சங்கங்களுக்கான 3-ம் நிலைத் தேர்தல்

வியாழக்கிழமை, 13 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.14 - தமிழகத்தில்  கூட்டுறவுச்  சங்கங்களுக்கான மூன்றாம் நிலைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல்  ஜூலை-2  அன்று நடைபெறும் என்றும் வாக்குப்பதிவு   ஜூலை.8-ந்தேதியன்று நடைபெறும் என்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கான   மாநிலத் தேர்தல் ஆணையர் மோகன் தெரிவித்துள்ளார். 

இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள  செய்திக் குறிப்பு வருமாறு:- 

 

மூன்றாம் நிலைத் தேர்தல்:

 

            தமிழகத்தில் முதல் நிலையில் 22,212 கூட்டுறவுச் சங்கங்களுக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் நிலையில் 191 சங்கங்களுக்கு ஒரே, கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இரண்டாம் நிலையில் தேர்தல் நடைபெற்ற சங்கங்களில் தலைவர் / துணைத்தலைவர் தேர்தலும் முடிவுற்று தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் / துணைத்தலைவர்கள் 11.6.2013 அன்று பதவி ஏற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து மூன்றாம் நிலையில் 81 கூட்டுறவுச் சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. 

தேர்தல் நடைபெறவுள்ள சங்கங்கள்:

மூன்றாம்   நிலையில் கூட்டுறவுச் சங்கங்களின்  பதிவாளரின் கட்டுப்பாட்டில்

உள்ள தமிழ்நாடு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, தமிழ்நாடு  மாநில  நகர கூட்டுறவு வங்கிகளின் இணையம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையம் உள்ளிட்ட 59 சங்கங்களுக்கும், பால் வளத்துறை ஆணையரின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்), மீன்வளத்துறை  இயக்குநரின் கட்டுப்பாட்டில்  தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம், கைத்தறித் துறை இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ்வரும் தமிழ்நாடு  கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும்  விற்பனைச் சங்கம் (கோ-ஆப்டெக்ஸ்),  தமிழ்நாடு கூட்டுறவு நுாற்பாலைகளின் இணையம், தமிழ்நாடு கூட்டுறவு துணிநுால் பதனிடும் நுாற்பாலை ்ரோடு,  தமிழ்நாடு பனைவெல்ல வளர்ச்சி வாரியத்தின் கீழ்  செயல்படும்   தமிழ்நாடு  மாநில  பனைவெல்லம்   மற்றும்    கயிறு     விற்பனை    கூட்டுறவு  இணையம், தொழில் ஆணையர் மற்றும் தொழில்வணிகத்துறை இயக்குநரின் கீழ்வரும் தமிழ்நாடு மாநில கயிறு விற்பனை கூட்டுறவு இணையம்,  தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் தொழில் கூட்டுறவு விற்பனை இணையம், தமிழ்நாடு தொழிற்கூட்டுறவு ரப்பர் பால் கலந்த கயிறு பொருட்கள் சங்கம், வேளாண்மைத் துறை இயக்குநரின் கட்டுப்பாட்டில் உள்ள 10 வேளாண் பொறியியல் மற்றும் சேவை கூட்டுறவு சங்கங்கள், சர்க்கரைத் துறை இயக்குநரின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையம், பட்டுப்பூச்சி வளர்ப்புத் துறை இயக்குநரின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர்கள் இணையம், (டான்சில்க்) வீட்டுவசதி கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம் உள்ளிட்ட மொத்தம் 81 சங்கங்களுக்கு மூன்றாம் நிலையில் தேர்தல் நடைபெறவுள்ளது.

 

தேர்தல் திட்டம்:

 

மேற்குறிப்பிட்ட 81 கூட்டுறவுச் சங்கங்களுக்கான வாக்காளர் பட்டியல் 25.06.2013    அன்று வெளியிடப்படுகிறது. இந்த வாக்காளர் பட்டியலுக்கான மறுப்பு ஏதும் இருப்பின் அதனை 27.6.2013-க்குள் தெரிவிக்கலாம்.  இறுதி வாக்காளர் பட்டியல் 29.6.2013  அன்று வெளியிடப்படும்.

வேட்பு மனு தாக்கல்:

வேட்பு மனுத்தாக்கல்   2.7.2013 காலை 10 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும். அன்றே வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு அன்று மாலை 6.00  மணிக்கு  தகுதியான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.  வேட்பு மனுவை திரும்பப் பெற விரும்புவோர்  மறு நாள்  3.7.2013 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அன்று மாலை 5.00 மணிக்கு  போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.

 

வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கையும்:

 

போட்டியுள்ள கூட்டுறவுச் சங்கங்களில்  8.7.2013 அன்று காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 10.7.2013 அன்று காலை 10.00 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தலைவர் / துணைத்தலைவர் தேர்தல்:

மூன்றாம் நிலையில் தேர்தல் நடைபெறும் 81 கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர் / துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 15.7.2013 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும்.

 

இடஒதுக்கீடு:

 

ஏற்கெனவே முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டது போலவே இந்த மூன்றாவது நிலைத் தேர்தலிலும் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகக் குழு உறுப்பினர் இடங்களில் 18 ெஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கும், 30 ெபெண்களுக்கும் இடஒதுக்கீடு செய்யப்படும். இதர இடங்கள்பொதுப்பிரிவினரிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும்.

நான்காவது நிலைத் தேர்தல்:

மூன்றாவது கட்டத் தேர்தல் முடிவடைந்ததும் நான்காவது கட்டத்தேர்தலுக்கான திட்டமும், தேர்தல் அட்டவணையும் வெளியிடப்படும்.

மேற்கண்டவாறு கூட்டுறவுச் சங்கங்களுக்கான மாநிலத் தேர்தல் ஆணையர் மோகன்,  (ஓய்வு) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

13தஅங23அ

வதேராவின் நில பேர ஊழல்: விளக்க ஆவணம் தர பிரதமர் அலுவலகம் மறுப்பு 

புது டெல்லி, ஜூன். 14 - காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா, நிலபேர ஊழல் தொடர்பான வழக்கில் பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த ஆவணங்களை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தர பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டது. 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா விவசாயிகளிடம் இருந்து மிக குறைந்த விலைக்கு நிலங்களை பெற்று கூடுதல் விலைக்கு டி.எல்.எப். நிறுவனத்துக்கு விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இந்த சர்ச்சைக்குரிய நில பேரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, நுதன் தாக்குர் என்ற தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர் அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளையில் ரிட்மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த வழக்கில் பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கூறப்பட்டு இருந்தது. 

இதையடுத்து, நுதன் தாக்குரின் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இந்த வழக்கில் பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தொடர்பான ஆவணங்களை கோரி நுதன் தாக்குர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், மனுதாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் ஆவணங்களை தர முடியாது என்று பிரதமர் அலுவலகம் கூறிவிட்டது. மேலும் இந்த விவகாரம் ரகசியமானது என கருதுகிறோம். இதுபோன்ற ரகசியங்களை வெளியிட சுப்ரீம் கோர்ட் விலக்கும் அளித்திருக்கிறது என்றும் பிரதமர் அலுவலக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்