முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொலைதூர கல்வி: ஜூலை-1முதல் பாடத்திட்டம் தொடக்கம்

வியாழக்கிழமை, 13 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஜூன். 14  - மதுரை காமராஜர் பல்கலைக் கழக தொலைதூர கல்வியில் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள 174 புதிய பாடத் திட்டங்கள் ஜூலை 1 ம் தேதி முதல் துவங்கப்படும் என துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் முன்பு நிதி நெருக்கடி ஏற்படாத வகையில் தொலைதூர கல்வி மேம்பாட்டில் முன்னாள் துணைவேந்தர் குத்தாலிங்கம் அதிக கவனம் செலுத்தினார். அப்போது மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் ஆங்காங்கே தொலைதூர கல்வி மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த மையங்களை மேம்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக பல்கலைக் கழக உயர்நிலை குழு ஒன்று மையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. 

நல்ல முறையில் செயல்படும் மையங்கள் தொடர்ந்து செயல்படவும், மற்ற மையங்களை மாற்றியமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பல்கலைக் கழகத்தின் நிதி ஆதாரத்துக்கு தொலைநிலை இயக்ககம் முதுகெலும்பு போன்றது. எனவே இந்த இயக்கத்தை திறம்பட செயல்படுத்தி தரமான கல்வி மூலம் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் வருவாயை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய சூழலுக்கு ஏற்ப மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் பாடத் திட்டங்களை மாற்றியமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

உலகத் தரத்தில் மதுரை பல்கலைக் கழக மாணவர்களின் பாடத்திட்டம் இருக்கும் வகையில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர்கள் குழு மூலம் 174 புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பாடத் திட்டங்களுக்கு பல்கலைக் கழக ஆட்சிக்குழு, ஆட்சி மன்ற குழுக்களில் ஏற்கனவே அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. ஜூலை 1 ம் தேதி முதல் இந்த புதிய பாடத் திட்டங்கள் துவங்கப்படும். இதன் மூலம் ஏற்கனவே பல்கலைக்கழக தொலைநிலை கல்வியில் பயிலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்