முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாவூத் இப்ராகீமையும் கொல்ல ஒபாமாவுக்கு வேண்டுகோள்

திங்கட்கிழமை, 2 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மே.3 - ஒசாமா பின்லேடனை கொன்றது மாதிரி மற்றொரு அதிபயங்கர தீவிரவாதியான தாவூத் இப்ராகீமையும் கொல்ல வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவை கம்ப்யூட்டர்களை பயன்படுத்துபவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஒசாமா பின்லேடனால் மக்களுக்கு மதிப்பிட முடியாத அளவுக்கு பேரிழப்பு ஏற்பட்டது. லட்சகணக்கான கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் வேலை இழக்க நேரிட்டது. நியூயார்க் நகரின் இரட்டை கோபுரம் மீது விமானத்தை மோதவிட்டு தாக்குதல் நடத்தியதில் ஆயிரக்கணக்கான அறிவி ஜீவிகள் பலியானார்கள்.  அதே மாதிரிதான் தாவூத் இப்ராகீமும் நாசவேலையில் ஈடுபட்டு வருகிறான். கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கும் தாவூத் இப்ராகீமுவுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று தெரிகிறது. அதனால் ஒசாமாவை சுட்டுக்கொன்ற நீங்கள் இந்தியாவுக்கு எதிராக நாசவேலையில் ஈடுபட்டு வரும் அவனையும் சுட்டுத்தள்ள வேண்டும் என்று அதிபர் ஒபாமாவுக்கு கம்ப்யூட்டரை பயன்படுத்துபவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஒசாமாவை சுட்டுக்கொலை செய்ததற்கு அதிபர் ஒபாமாவை கம்ப்யூட்டரை பயன்படுத்துபவர்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர். ஒசாமாவை சுட்டுக்கொன்றதற்காக அதிபர் ஒபாமாவுக்கு பாராட்டு செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வாழ்த்து செய்தியில் ஒசாமாவை கொன்றது மாதிரி தாவூத் இப்ராகீமையும் கொன்றுவிடுங்கள்,பைத்தியக்காரனை கொன்றதற்கு நாங்கள் பெரும் மகிழ்ச்சியும் அடைகிறோம் என்ற வரியும் சேர்க்கப்பட்டுள்ளது. தாவூத் இப்ராகீமும் தற்போது பாகிஸ்தானில்தான் இருப்பதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்