முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உறுப்பினர் படிவம்: ஓ.பி.எஸ்-பழனியப்பன் துவக்கி வைத்தனர்

வியாழக்கிழமை, 13 ஜூன் 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.14 - முதலமைச்சரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவிப்பிற்கிணங்க நேற்று அ.தி.மு.க  தலைமை கழகத்தில் உறுப்பினர்கள்  சேர்க்கை  மற்றும் புதுப்பிப்பதற்கான விண்ணப்ப படிவங்களை பெற அ.தி.மு.க தலைமை  கழகத்தில்  கூட்டம் அலை அலைமோதியது. அமைச்சர்கள் , மாவட்ட செயலாளர்கள்,  நிர்வாகிகள், க்யூவில் நின்று விண்ணப்ப படிவங்களை பணம் செலுத்தி வாங்கினார்கள்.

விண்ணப்ப படிவங்களை விநியோகம் செய்ய 13 சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு  கவுண்டரிலும் 4 அல்லது 5 மாவட்டங்களுக்கான விண்ணப்பபடிவம் வழங்கப்பட்டது. அ.தி.மு.க தலைமை கழகத்தில் கட்டுக்கடங்கா கூட்டம் இருந்தது. விண்ணப்ப படிவங்ளை வாங்க நீண்ட கியூவில் நின்றார்கள். எங்கும் உற்சாகம், எழுச்சி காணப்பட்டது.விண்ணப்ப  படிவங்களை வாங்க வந்தவர்கள் ஜெயலலிதாவை வாழ்த்தி கோஷம் எழுப்பினார்கள்.

உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவத்துக்கு  (25 உறுப்பினர்களை சேர்க்கலாம்) 10 ரூபாய் கட்டணம் செலுத்தி வாங்கி சென்றார்கள். ஒருவருக்கு முதல் கட்டமாக 100 விண்ணப்பங்கள் மட்டுமே இன்று வழங்கப்பட்டன.

தினமும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை ஜூலை மாதம் 7-ந் தேதி க்குள் (ஞாயிற்றுக்கிழமை ) உரிய கட்டண தொகையுடன் தலைமை கழகத்தில்  ஒப்படைக்க வேண்டும்.

25பேரை சேர்க்கும்  ஒரு விண்ணப்பபடிவத்தின் கட்டணம் 10 ரூபாய் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஒரு உறுப்பினர் சேர்க்கைக்கு (1 கார்டு) 10 ரூபாய் வீதம் வழங்க வேண்டும் என்று  முதலமைச்சர்  ஜெயலலிதா  வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

அ.தி.மு.க சட்ட திட்ட விதி 30 ன்பிரிவு 2ன் படி கழக அமைப்புகளின் பொதுதேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்திட வேண்டும் என்பதற்கு இணங்க, கழக அமைப்புத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதன் அடிப்படையில் அ.தி.மு.க வில் உறுப்பினர்களாக  உள்ளவர்கள்  தங்களுடைய  பதிவை புதுப்பிதற்கும், புதிய உறுப்பினர்களை  சேர்ப்பதற்கும் விண்ணப்ப படிவங்கள்  வழங்கப்படுகிறது என்று ஜெயலலிதா கூறியிருந்தார்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள்  தலைமைக் கழகத்தில்  பெறப்பட்ட பின்பு, அதற்கான உறுப்பினர், உரிமைச்சீட்டுகள் வழங்கப்படும். புதிய உறுப்பினர் உ ரிமைச்சீட்டுகளை ப் பெற்றுள்ள கழக உடன்பிறப்புகள் மட்டுமே நடைபெற உள்ள கழக அமைப்புத் தேர்தலில்  போட்டியிடுவதற்கும் வாக்களிப்பதற்கும். தகுதி உடையவர் ஆவார்கள் என்றும் ஜெயலலிதா கூறியிருந்தார்.

அ.தி.மு.க  தலைமை கழகத்தில்  உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப  வினியோகத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

நிதி அமைச்சரும் அ.தி.மு.க பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் விண்ணப்ப படிவ விநியோகத்தை துவக்கி வைத்தார். தலைமை நிதியமைச்செயலாளரும், அமைச்சருமான  பழனியப்பன் உடன் இருந்தார்.

அமைச்சர்கள்  மோகன், செல்லூர் ராஜூ, காமராஜ், மூர்த்தி, பி.தங்கமணி, செந்தில்பாலாஜி, ஜெயபால், ராஜேந்திரபாலாஜி, ஆனந்தன், ஆகியோர் கியூவில் நின்று விண்ணப்ப படிவங்களை வாங்கினார்கள்.

மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா எம்.பி, வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ, விருகை  ரவி, டி.ஜி.வெங்கடேஷ்பாபு, வாலாஜாபாத் பா.கணேசன், உட்பட மாவட்ட செயலாளர்கள் விண்ணப்ப படிவங்களை பெற்று சென்றார்கள்.

சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.கந்தன்,, கே.குப்பன், கடம்பூர் ராஜூ, அன்பழகன், உட்பட பல எம்.எல்.ஏ க்களும் கியூவில் நின்று விண்ணப்பபடிவங்களை பெற்று சென்றார்கள்.

முன்னாள் மாவட்ட செயலாளர் ஆதிராசாராம், தூத்துக்குடி எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவருமான என்.சின்னதுரை கவுன்சிலர்கள் பி.கன்னையன், வி.கே.பாபு, அண்ணா தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் இ.எஸ்.சதீஷ்பாபு, இணைசெயலாளர் சத்தியநாரயணன்,  முன்னாள் கவுன்சிலர் ஜெ.ஏ.சிவசுப்பிரமணியன், தி.நகர் ஆறுமுகம், ஆர்.கே.நகர் முரளி முருகன் உட்பட ஏராளமானோர் விண்ணப்ப படிவங்களை  வாங்கி சென்றார்கள்.

அ.தி.மு.கவில் அமைப்பு ரீதியாக 52 மாவட்டங்கள் உள்ளன. எனவே 13 சிறப்பு கவுண்டர்கள், திறக்கப்பட்டு ஒவ்வொரு கவுண்டரிலும்  4 அல்லது 5 மாவட்டங்களுக்கு விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது.

இது தவிர பாண்டிச்சேரி உட்பட மாநிலங்களுக்காக தனியாக கவுண்டர் திறக்கப்பட்டிருந்தது.  கூட்டத்தினரை ஒழுங்குப்படுத்தி விண்ணப்ப படிவங்களை வாங்குவதற்கு வசதியாக மாநகர போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க  செயலாளர் கே.எஸ்.அஸ்லாம், பொருளாளர், எஸ்.பழனி மற்றும்  நிர்வாகிகள் செய்திருந்தனர்.

உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பத்தில் பெயர், முகவரி, தந்தை பெயர், கல்வித்தகுதி, முன்பு உறுப்பினரா? தொழில் உட்பட அனைத்து விவரங்களும் கேட்கப்பட்டிருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்