முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவல் துறையினர் குடும்பங்களுக்கு முதல்வர் நிதியுதவி

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.15 - பணிக்காலத்தில் மரணமடைந்த காவல் துறையினர் ஏழு பேர் குடும்பங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தலா ரூ.3 லட்சம் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- சேலம் மாவட்டம், வீராணம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த ஜெயபால்  உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  26.5.2013 அன்று காலமானார் என்ற செய்தியையும்;

மதுரை மாவட்டம், அவனியாபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த  வரதராஜன்   உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 28.5.2013 அன்று காலமானார் என்ற செய்தியையும்; 

வேலூர் மாவட்டம், ஆம்பூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணி புரிந்து வந்த சேகர் ஆம்பூர் - வேலூர்  தேசிய நெடுஞ்சாலையில் 30.5.2013 அன்று ஏற்பட்ட சாலை விபத்தில்  பலத்த காயமடைந்து மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; 

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த  பாலசுப்பிரமணியன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 31.5.2013 அன்று காலமானார் என்ற செய்தியையும்;

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த சத்தியதாஸ் உடல்நலக் குறைவால் 1.6.2013 அன்று காலமானார் என்ற செய்தியையும்;

தூத்துக்குடி மாவட்டம்,  ஆத்தூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த .வெயிலுகந்த பெருமாள் உடல்நலக் குறைவால் 3.6.2013 அன்று காலமானார் என்ற செய்தியையும்;

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த அர்ஜுனன்  உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 3.6.2013 அன்று காலமானார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். 

காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரதராஜன், சத்தியதாஸ், வெயிலுகந்த பெருமாள், அர்ஜுனன்;   தலைமைக் காவலர்கள்  ஜெயபால், பாலசுப்பிரமணியன்  மற்றும் காவலர் சேகர் ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உடல்நலக்  குறைவால் காலமான சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரதராஜன், சத்தியதாஸ், வெயிலுகந்த பெருமாள், அர்ஜுனன்,  தலைமைக் காவலர்கள் ஜெயபால் மற்றும் பாலசுப்பிரமணியன்; சாலை  விபத்தில் உயிரிழந்த காவலர் சேகர் ஆகியோரின் குடும்பங்களுக்கு  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து  தலா  மூன்று லட்சம்  ரூபாய்  வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். 

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago