முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்புமணி ராமதாசின் சிறப்பு அதிகாரி வீட்டில் சி.பி.ஐ. ரெய்டு

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, பிப்.23 - முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாசின் சிறப்பு அதிகாரி வீட்டில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு நடத்தியது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. 

முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அன்புமணி ராமதாசிடம் சிறப்பு அதிகாரியாக இருந்தவர் டி.எஸ்.மூர்த்தி என்பவர் இருந்து வந்தார். அன்புமணி ராமதாஸ் பதவி வகித்த துறைக்கு கீழ் தான் இந்தியா முழுவதும் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பது நடைபெறுகிறது. 

இந்தூரில் உள்ள இன்டெக்ஸ் மெடிகல் காலேஜுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக டி.எஸ்.மூர்த்தி மீது புகார் எழுந்ததை அடுத்து டி.எஸ்.மூர்த்தி மீது சி.பி.ஐ. விசாரணை நடைபெற்றது. டி.எஸ்.மூர்த்தியிடம் ஏற்கனவே சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் டி.எஸ்.மூர்த்தி வீட்டில் ரெய்டு நடத்த கடந்த மாதம் சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டிற்கு டெல்லியிலிருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் வந்தனர். அப்போது டி.எஸ்.மூர்த்தி வீட்டில் இல்லை. வீட்டில் உள்ள அனைவரும் வீட்டை பூட்டிக் கொண்டு அமெரிக்கா சென்று விட்டனர். 

இதனால் ஏமாற்றமடைந்த சி.பி.ஐ. அதிகாரிகள்  டி.எஸ்.மூர்த்தியின் வீட்டிற்கு சீல் வைத்து விட்டு சென்று விட்டனர். பின்பு டி.எஸ்.மூர்த்தி சென்னை திரும்புவது குறித்து ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று சிறப்பு அதிகாரி டி.எஸ்.மூர்த்தி அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தார். அவர் வந்த தகவல் கிடைத்ததும் சி.பி.ஐ. அதிகாரிகள்  விமான நிலையத்திலேயே வைத்து அவரை மடக்கி பிடித்து சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து வந்தனர். பின்பு பூட்டியிருந்த வீட்டை திறந்து அதிகாலை முதல் மதியம் 3 மணி வரை சோதனை நடத்தினர். பல்வேறு ஆவணங்களை அப்போது அவர்கள் எடுத்ததாக கூறப்படுகிறது. எடுத்த ஆவணங்களை வைத்தும் அவரிடம் துருவி துருவி விசாரித்துள்ளனர். பின்பு முக்கிய ஆவணங்களுடன்  அதிகாரிகள் டெல்லி புறப்பட்டு சென்றனர். தேவைப்பட்டால் டி.எஸ்.மூர்த்திக்கு சம்மன் அனுப்பப்படலாம் என்று தெரிகிறது. ஏற்கனவே அன்புமணி ராமதாசின் துறையின் கீழ் பணியாற்றும் சுகாதாரத்துறை செயலாளர் கேதன் தேசாய் கைது செய்யப்பட்டு ரூ.1,500 கோடி ரூபாய் நோட்டுகளும், 240 கிலோ தங்கமும் அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்