முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. போர்க் குற்ற விசாரணையை ஏற்க முடியாது - ராஜபக்சே

செவ்வாய்க்கிழமை, 3 மே 2011      உலகம்
Image Unavailable

 

கொழும்பு,மே.3 - இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.சபை உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த விசாரணையை ஏற்க முடியாது என்று ராஜபக்சே தெரிவித்துள்ளார். 

2009 ம் ஆண்டு இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலை புலிகளுக்கும் இறுதிக்கட்ட போர் நடைபெற்றது. இப்போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் போர் தர்மம் இன்றி கண்மூடித்தனமாக கொல்லப்பட்டனர். எனவே இலங்கை அரசு போர்க்குற்றம் அளித்ததாக உலக நாடுகள் போர்க்கொடி தூக்கின. இதைத் தொடர்ந்து ஐ.நா. சபை 3 பேரை நியமித்து விசாரணை செய்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கை அரசு போர்க்குற்றம் செய்து விட்டது என ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீமூன் அறிவித்தார். 

இதற்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. அதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தது. இந்த நிலையில் நேற்று கொழும்பில் நடந்த மே தின பேரணியில் கலந்து கொண்டு ராஜபக்சே பேசினார். அப்போது இறுதிக் கட்ட போரின் போது விடுதலை புலிகளால் துப்பாக்கி முனையில் மனித கேடயமாக பிடித்து வைத்திருந்த 3 லட்சம் மக்களை காப்பாற்றினோம். பசியால் வாடிய அவர்களுக்கு உணவு வழங்கினோம். தீவிரவாதத்தில் இருந்து அவர்களை மீட்டோம். போரின் போது இரு தரப்பிலும்தான் குற்றங்கள் நடந்தன. ஆனால் விடுதலை புலிகள் மீது குற்றம் சுமத்தப்படவில்லை. முன்பு குழந்தைகள் எல்லாம் தீவிரவாத பாதையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர். 

இவையெல்லாம் மனித உரிமை மீறலா? குற்றமா? எந்த சூழ்நிலையிலும் இலங்கை வெளிநாடுகளின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணியாது. எனவே ஐ.நா. சபையின் போர்க்குற்ற விசாரணையை ஏற்க முடியாது என்று ராஜபக்சே பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago