முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர் தி.கல்லூரி: விண்ணப்பிக்க ஜூலை 5 கடைசிநாள்

சனிக்கிழமை, 15 ஜூன் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.16 - எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் மூன்றாண்டு பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 5-ம் தேதி கடைசி நாளாகும். அதன் விபரம் வருமாறு:- திரைப்படத் துறை மற்றும் தொலைக்காட்சித் துறையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கி வரும் எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்.  கடந்த ஐம்பது ஆண்டுகளாக, சென்னை தரமணியில் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கீழ் செவ்வனே இயங்கி வருகின்றது.

மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியர் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் ஒலிப்பொறியியல், படம் பதனிடுதல், படத்தொகுப்பு ஆகிய 4 பிரிவுகளிலும், பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியர் இயக்குதல், அனிமேஷன்  மல்டிமீடியா டெக்னாலஜி, 3டி அனிமேஷன்,  கிராடிபிக்ஸ் ஆகிய 3 பிரிவிலும்  இக்கல்லூரியில் மூன்றாண்டு கால பட்டயப் படிப்பிற்காக 2013-2014-ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்குபவதற்கும் மற்றம் பெறுவதக்குமான கால அவகாசம் 05.07.2013 வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மேற்குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் சேர்ந்து, கலைத்துறையில் தங்களின் கலை ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள விரும்பும் மாணவ/மாணவியர், இதற்கான விண்ணப்பப் படிவங்களை,  16.06.2013 நாளிட்ட முன்னனி தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் வெளிவரும் விளம்பரங்களைப் பார்த்தும்  தமிழக அரசின் ாசூசூசூ.சிடூ.கிச்சு.டுடூா  என்ற இணையதள முகவரியில் இருந்து படியிறக்கம் செய்தும்  விண்ணப்பிக்கலாம். 

அனைத்து பிரிவுகளுக்குமான விண்ணப்பங்களை மீள சமர்ப்பிப்பபதற்கு கடைசி நாள் 05.07.2013 மாலை 5 மணி ஆகும் என்று இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசு இணைச் செயலாளர், சென்னை-9 அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்