முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோர்ஜி மாயமான சம்பவம் - பாரதிய ஜனதா கடும் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 3 மே 2011      இந்தியா
Image Unavailable

இதாநகர்,மே.3 - முதல்வர் டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டர் விமானம் மாயமானது குறித்து முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வருவதற்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அருணாசலப்பிரதேச மாநில முதல்வர் டோர்ஜி காண்டு மற்றும் 4 பேர் புத்த ஸ்தலமான தவாங் நகரில் இருந்து கடந்த 30-ம் தேதி காலை 9 மணிக்கு ஒரு ஹெலிகாப்டரில் மாநில தலைநகர் இதாநகருக்கு புறப்பட்டுச் சென்றனர். ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. விமானநிலையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் ஒரே பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் அனைவரும் கவலை அடையத் தொடங்கினர். பின்னர் விமானம் பூட்டானில் பத்திரமாக தரையிறங்கியுள்ளது என்றும் ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போதுதான் நிம்மதி பெருமூச்சு ஏற்பட்டது. முதல்வர் டோர்ஜியும் காண்டுவும் உயிருடன் திரும்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இந்த நம்பிக்கை சிறிது நேரம்தான் நீடித்தது. முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கிய இடம் தெரியவில்லை என்றும் விமானத்தை ராணுவத்தினர் தேடி வருகின்றனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு நேற்றுடன் 3 நாட்களாகியும் அவரைப்பற்றி இன்னும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இப்படி அதிகாரிகள் முரண்பட்ட தகவல்களை கூறவதற்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முதல்வர் குறித்து பொறுப்புள்ள அதிகாரிகள் முரண்பட்ட தகவல்களை கூறுவது துரதிர்ஷ்டவசமானது என்றும் பாரதிய ஜனதா கூறியுள்ளது. தற்போது அருணாசலப்பிரதேச மாநிலத்தில் மோசமான காலநிலை நிலவுகிறது. அப்படியிருந்தும் முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்கு ஒற்றை என்ஜின் பொருத்திய ஹெலிகாப்படரை பயன்படுத்தியதற்கும் பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இனிமேலாவது நவீன தொழில்நுட்பம் கொண்ட ஹெலிகாப்டர்களை பயன்படுத்த வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கேட்டுக்கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்