முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒசாமா சுட்டுக்கொலை - இந்தியா முழுவதும் உஷார்

செவ்வாய்க்கிழமை, 3 மே 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மே.3 - அதிபயங்கரவாதி ஒசாமா பின்லேடன் படுகொலை செய்யப்பட்டிருப்பதன் மூலம் இந்தியா முழுவதும் உஷாராக இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார். பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை நேற்று அமெரிக்க ராணுவத்தினர் சுட்டுக்கொலை செய்தனர். இதை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் உறுதி செய்துள்ளார். இதனையடுத்து மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று டெல்லியில் இருந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் பின்லேடன் சுட்டுக்கொலை செய்யப்பட்டதையொட்டி இந்தியாவில் தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபடலாம். அதனால் நாட்டின் அனைத்து தரப்பினரும் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். பாகிஸ்தானில் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான். அதுவும் எல்லையோரத்தில் இல்லை. தலைநகருக்கு அருகில்தான் பெரிய வீடு கட்டி அங்கு தங்கியிருந்தபோது சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளான். இது மேலும் ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அதாவது அனைத்து தீவிரவாத இயக்கங்களையும் சேர்ந்த தலைவர்கள், கமாண்டர்கள் அனைவரும் பாகிஸ்தானில் மறைந்து வாழலாம் என்று ப.சிதம்பரம் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். மும்பை தாக்குதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தீவிரவாதிகளையும் பிடிக்க பாகிஸ்தான் உதவ வேண்டும். மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் பெயர்களையும் தாக்கியவர்களுக்கு உதவியவர்களின் பெயர் கிடைக்காதாதல் அவர்களின் குரல்கள் பதிவு செய்யப்பட்ட சி.டி. களையும ஆதாரங்களுடன் கொடுத்துள்ளோம். அவர்கள் அனைவரும் பாகிஸ்தானில்தான் தங்கியிருப்பது உறுதியாகத் தெரிகிறது. அவர்களை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டுவர பாகிஸ்தான் உதவ வேண்டும் என்றும் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார். பின்லேடன் மறைந்திருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கடந்த ஆகஸ்ட் மாதம்தான் அதிபர் ஒபாமா தெரிவித்தார். அதன்படி அவர் தங்கியிருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டு சுட்டுதள்ளப்பட்டுள்ளார். ஒபாமா உடல் அமெரிக்க கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் ஒசாமா கொல்லப்பட்டதையடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து துறைமுகங்கள்,விமான நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொச்சி துறைமுகத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துறைமுகத்திற்கு வரும் கப்பல்கள் அனைத்தும் சோதனைக்கு பிறகே அனுப்பப்படுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago